PDF chapter test TRY NOW
மனித உடலில் எலும்பு மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்துடன் இணைந்து தசை மண்டலமும் உடலசைவிற்கு உதவுகிறது. தசைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. அதனால் அவை உடல் அசைவிற்கு உதவுகின்றன.
தசைகள் உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ளவும், உடல் நிலைப்பாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றன.
உடலில், மூன்று வகை தசைகள் உள்ளன. அவை
- எலும்புத் தசைகள்
- மென் தசைகள்
- இதயத் தசைகள்
தசை மண்டலம்
தசைகளின் இயக்கம்
தசைகளால் தள்ள இயலாது. இழுத்துக் கொள்ள மட்டுமே இயலும். மூட்டுக்களில் எலும்புகளை அசைவிக்க இரு தசைகள் தேவைப்படுகின்றன. ஒரு தசை சுருங்கும் போது மற்றொன்று விரிவடைகிறது.
எடுத்துக்காட்டாக, கைகளை மடக்கி உயர்த்தும் பொழுது தசைகளின் செயல்பாடுகளைக் காணலாம்.
முன்னங்கையை மேலும், கீழும் அசைவிக்க இருதலைத் தசை, முத்தலைத் தசை என இரு வகைத் தசைகள் பயன்படுகின்றன. நமது முன்னங்கையை மேலே தூக்கி உயர்த்தும் போது இரு தலைத்தசை சுருங்கி, சிறியதாகிறது.
அதே நேரம் முத்தலை தசை விரிந்து கையை மேலே உயர்த்த உதவுகிறது. நாம் முன்னங்கையைக் கீழ் இறக்கும் போது முத்தலைத் தசை சுருங்கி இருதலைத் தசை விரிவடைந்து கையைக் கீழே இறக்க உதவுகிறது.