PDF chapter test TRY NOW
உடலில் மூன்று வகையான இரத்தக் குழாய்கள் உள்ளன. அவை
- தமனிகள்
- சிரைகள்
- தந்துகிகள்
இரத்தக் குழாய்கள்
அமைப்பு
இவைகள் மூடிய வலைப்பின்னல் போன்றது.
பணி
இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன.
இரத்தம்
இரத்தம் ஒரு திரவ இணைப்புத் திசுவாகும். இது பிளாஸ்மா மற்றும் இரத்த அணுக்களைக் கொண்டது. இரத்த சிவப்பணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகிறது. இரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். அவை,
- இரத்த சிவப்பணுக்கள் (RBCs)
- இரத்த வெள்ளை அணுக்கள் (WBCs)
- இரத்தத் தட்டுகள் (Platelets)
செயல்பாடுகள்
1. நுரையீரல் தமனி — வலது வென்டிரிகிளிலிருந்து நுரையீரலுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
2. நுரையீரல் சிரை — நுரையீரலிலிருந்து இரத்தத்தை இடது எட்ரியத்திற்கு எடுத்துச் செல்கிறது.
3. குருதி நுண் நாளங்கள் — இவை மிகவும் குறுகலான நாளங்கள் ஆகும். இவை அனைத்து தமனிகளின் முனைகளை சிரைகளோடு இணைக்கின்றன. இவை ஆக்சிஜன் மற்றும் செரிமானமானச் சத்துகளை மற்ற உறுப்புகளுக்கு அளித்து அங்கிருந்து கழிவுப் பொருட்களைக் கடத்துகிறது.
4. தமனிகள் — வெளிர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை இதயத்திலிருந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் குருதியை எடுத்துச் செல்கிறது. நுரையீரல் தமனிகளைத் தவிர மற்ற அனைத்துத் தமனிகளும் சுத்த இரத்தத்தைக் கடத்துக்கிறது.
5. சிரைகள் — கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை உடலின் பிற பகுதிகளிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வருகிறது. நுரையீரல் சிரைகளைத் தவிர மற்ற அனைத்துச் சிரைகளும் அசுத்த இரத்தத்தைக் கடத்துகிறது.
Important!
இரத்த தானம்
மருத்துவமனைகளில் நோயாளிகளின் தேவைக்காக இரத்தம் தற்காலிகமாக இரத்த வங்கிகளில் சேமிக்கப்படுகின்றது. \(18\) வயதுக்கு மேல், ஆரோக்கியமான ஒவ்வொருவரும் இரத்ததானம் செய்யலாம். அதன் மூலம் அவசர விபத்துக் காலங்களிலும், அறுவை சிகிச்சையின் போதும், இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு உரிய காலத்தில் இரத்தம் கொடுக்கப்படுகிறது. இரத்ததானம் இவர்களின் உயிர் காக்க உதவுகிறது.