PDF chapter test TRY NOW
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலம் என்பது இதயம், இரத்தக்குழாய்கள் மற்றும் இரத்தம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
பணிகள்
நம் உடலில் உள்ள சுவாச வாயுக்கள், உணவுச்சத்துப் பொருள்கள், ஹார்மோன்கள், கழிவுப்பொருள்கள் போன்றவற்றைக் கடத்துகிறது. இது தீங்கு விளைவிக்கக் கூடிய நோய்க் கிருமிகளிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. மேலும், உடல் வெப்ப நிலையை ஒரே சீராக வைக்கவும் உதவிச் செய்கிறது.
இரத்த ஓட்ட மண்டலம்
இதயம்
இதயம் நம் உடலின் மார்பறை மற்றும் இரண்டு நுரையீரல்களுக்கு இடையே அமைந்துள்ளது. இது நான்கு அறைகளையும், இரு சுவர்களைக் கொண்ட பெரிகார்டியம் உறையினால் சூழப்பட்டுள்ளது.
இதயத்தின் பாகங்கள்
பணி
இதயம் நம்முடைய வாழ்நாள் முழுவதும் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ந்து இரத்தத்தை உந்தி அனுப்புகிறது.