PDF chapter test TRY NOW

நிலத்தின் மேற்பரப்பில் வளர்கின்ற தாவரப் பகுதிக்குத் தண்டுத் தொகுப்பு என்று பெயர். இதன் மைய அச்சுத் தண்டு என அழைக்கப்படும்.
தண்டுத் தொகுப்பானது பின்வரும் முக்கியப் பாகங்களைக் கொண்டுள்ளது. அவை:
  1. இலைகள்
  2. மலர்கள்
  3. கனிகள்
இங்கு தண்டு மற்றும் இலைகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தண்டு
தண்டானது தாவரத்தின் வலிமையான பகுதியாகும். இது "எதிர் புவிநாட்டம்" கொண்டது, அதாவது ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி வளர்கிறது.
தண்டானது சூரிய ஒளியை நோக்கி வளரும் தன்மை உடையது. அது செங்குத்தாகவோ அல்லது  கிளைகளை வளைத்தோ ஒளியை நோக்கி வளர்கிறது.
 
YCIND25052022_3809_Plant_TM_3.png
தாவரத் தண்டின் பாகங்கள்
  1. தண்டில் இலைகள் தோன்றும் பகுதி “கணு” எனப்படும்.
  2. இரண்டு கணுக்களுக்கு இடையே உள்ள பகுதி “கணுவிடைப் பகுதி” ஆகும்.
  3. தண்டின் நுனியில் மொட்டானது தோன்றும்; அது "நுனி மொட்டு" எனப்படும்.
  4. இலையின் அடிப்பகுதிக்கும், தண்டிற்கும் இடையே உள்ள கோணம் “இலைக்கோணம்” என்று அழைக்கப்படுகிறது.
  5. இலையின் கோணத்தில் தோன்றும் மொட்டு “கோண மொட்டு” எனப்படும்.
தண்டின் முக்கியப் பணிகள்:
  • தண்டானது தாவரத்தின் அனைத்து பாகங்களான கிளைகள், இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவற்றைத் தாங்குகின்றது.
  • வேரினால் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தண்டின் வழியாக தாவரத்தின் மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
  • சில தாவரங்களில் தண்டானது எஞ்சிய மிகுதி உணவை சேர்த்து வைக்கப் பயன்படுகிறது.
Example:
கரும்பு
இலை
இலை தாவரத்தின் முக்கிய பகுதியாகும்; இது தாவரத்திற்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி; அதன் உணவைத் தானே தயாரிக்க பெரிதும் உதவுகிறது.
  • தண்டின் கணுவின் மேல் விரிந்த தட்டையான பசுமை நிறத்தில் தோன்றும் புற அமைப்பு இலை ஆகும்.
  • தண்டு மற்றும் இலையை இணைக்கும் காம்புப் பகுதி "இலைக் காம்பு" எனப்படும். சில இலைகள், அகலமாகவும் மற்றும் சில இலைகள் குறுகியதாகவும் உள்ளன.
  • இலையின் தட்டையான பகுதிக்கு "இலைத்தாள்" அல்லது "இலைப் பரப்பு" என்று பெயர். இலைக்காம்பானது இலையின் மைய நரம்பாக விரிவடைகிறது; அதிலிருந்து கிளை நரம்புகள் தோன்றுகின்றன.
  • தண்டு அல்லது கிளையுடன் இணைக்கப்பட்டுள்ள இலையின் பகுதி "இலையடிப் பகுதி" எனப்படும்.
  • ஒரு சில இலைகளின் அடிப்பகுதியில் இரண்டு சிறிய பக்கவாட்டு வளரிகள் காணப்படும், அவை “இலைச்செதில்கள்” எனப்படும்.
  • பெரும்பாலான இலைகள் பசுமை நிறத்தில் காணப்படுகின்றன, அதற்குக் காரணம் அவற்றிலுள்ள பச்சை நிறமிகளான பச்சையம் ஆகும்.
  • இலையின் அடிப்பகுதியில் நுண்ணிய துளைகள் காணப்படுகின்றன; இவை இலைத் துளைகள் எனப்படுகின்றன. இதன் மூலம் நீராவிப் போக்கு நிகழ்கிறது.
YCIND25052022_3809_Plant_TM_4.png
இலையின் பாகங்கள்
 
இலையின் முக்கியப் பணிகள்:
  • தாவரத்தின் சுவாசத்திற்கு உதவுகிறது.
  • ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகிறது. (தனது உணவைத் தானே தயாரிக்கிறது).
  • இலைத்துளை வழியே நீராவிப்போக்கு நடைபெறுகிறது.
Important!
விக்டோரியா அமசோனிகாஎனும் தாவரத்தின் இலைகள் \(3\) மீட்டர் வரை வளரும். ஒரு முதிர்ந்த விக்டோரியா இலை \(45\) கிலோகிராம் எடைகொண்ட பொருட்கள் அல்லது ஒரு நபரை தாங்கும் வலிமை கொண்டது.
water-lilies-2388843_1280.jpg
விக்டோரியா அமசோனிகாவின் இலைகள்