PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமின் சுற்று இணைப்பின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே,
- எளிய மின்சுறறு,
- தொடர் இணைப்பு,
- பக்க இணைப்பு.
எளிய மின்சுற்று:
- ஒரு சாவி, ஒரு மின்கலன் ஒரு மின் விளக்கு மற்றும் இணைப்புக் கம்பிக் கொண்டு உருவாக்கப்படும் மின்சுற்று எளிய மின்சுற்று எனப்படுகிறது.
எளிய மின்சுற்றின் விளக்கப்படம்
தொடர் இணைப்பு :
- இந்த மின்சுற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் தொடர்ச்சியாக இருக்குமாறு சாவி, மின்கலன் மற்றும் இணைப்புக் கம்பிகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும், மின்சுற்று தொடர் இணைப்பு மின்சுற்று எனப்படும்.
தொடர் இணைப்பின் விளக்கப்படம்
- இந்த மின்சுற்றில் ஏதனும் ஒரு மின் விளக்கு பழுதடைந்தாலும் மின்சுற்று தொடரில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைந்து விடும்.
பக்க இணைப்பு :
- இந்த மின்சுற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் விளக்குகள் இணையாக இருக்குமாறு சாவிகள், மின்கலன் மற்றும் இணைப்பு கம்பிகள் கொண்டு உருவாக்கப்படும். இந்த வகையான மின் சுற்று இணை இணைப்பு மின்சுற்று எனப்படும்.
இணை இணைப்பின் விளக்கப்படம்
- இந்த மின்சுற்றில் ஏதனும் ஒரு மின் விளக்கு பழுதடைந்தாலும், அந்த இணைப்பில் மற்றைய விளக்குகள் எரியும். எனவே, வீடுகளில் பக்க இணைப்பு முறையைப் பயன்படுத்துகிறோம்.
Important!
உங்களுக்கு தெரியுமா ?
- ஈல் என்னும் ஒரு வகை மீன் மின்சாரத்தை உருவாக்கும் திறனை கொண்டுள்ளது. இவை மின் அதிர்வை வெளியிட்டு எதிரிகளிடமிருந்து தங்களைத் தற்காத்து கொள்ளவும், தங்களுக்குத் தேவையான உணவைப் பிடிக்கவும் பயன்படுகின்றது.
- அம்மீட்டர் என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிடும் கருவியாகும் . இக்கருவியானது சுற்றில் தொடர் இணைப்பில் இணைக்க வேணடும்.