PDF chapter test TRY NOW
இப்பகுதியில் காந்தத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
சுமார் \(2500\) வருடத்திற்க்கு முன்பு “கிரேக்க” நாட்டின் மெக்னீசியா என்ற ஊரில் தான் காந்தம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, மேக்னஸ் என்ற மேய்ப்பன் ஒரு நாள் மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை மலைக்கு அழைத்துச் சென்றான். ஆடுகள் மெய்ந்து கொண்டு இருக்கும் போது சற்றே ஒரு பாறையின் மீது சற்று கண்களை மூடி அயர்ந்தான்.
பிறகு, எழுந்து செல்லும் போது, சிறிய இரும்பாலான அவனது தடியும் அவனது காலனியும் அந்த பாறையை விட்டு எடுக்க முடியவில்லை. அதிர்ச்சியில் உறைந்த மேக்னஸ் நடந்த அதிசயத்தை ஓடி சென்று ஊரில் உள்ள மக்களிடம் நடந்த நிகழ்வை விளக்கினான்.
காந்த கற்கள் மற்றும் கைத்தடி
மேக்னஸ் சொல்வதை நம்பாத ஊர் மக்கள் அவனை திட்டினார்கள்.
மேக்னஸ் அனைவரையும் அந்த அதிசய பாறை இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றான். இந்த நிகழ்வுக்கு பிறகு தான் காந்தம் என்ற ஒன்று இருப்பதை கண்டறிந்தார்கள்.
அந்தப்பாறை காந்தத்தன்மையுடையது. அது மேக்னஸின் கைத்தடியை மட்டுமல்ல, இரும்பாலான அனைத்துப் பொருள்களையும் ஈர்ப்பதை மக்கள் கண்டறிந்தனர்.
இது போன்ற பாறைகள் உலகின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டது. காந்தத்தன்மையுடைய இப்பாறைகள் சிறுவன் மேக்னஸின் பெயரால் ‘மேக்னட்’என்றும், அதன் தாதுக்கள் ‘மேக்னடைட்’ என்றும் அழைக்கப்பட்டன.
இப்பாறைகள் கண்டறியப்பட்ட'மெக்னீசியா' என்ற ஊரின் பெயராலும் இப்பெயர் வந்திருக்கலாம்.
மேக்னடைட் தாது
இவை இயற்கையான பாறைகள் என்பதால் இவைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் இருக்காது. "மேக்னடைட்” (இயற்கைக் காந்தம்) எனப்படுகிறது.
காந்தங்கள் திசையினை அறியப் பயன்படுவதால், இவை “வழிகாட்டும் கற்கள்“ எனவும் அழைக்கப்படுகின்றன.