PDF chapter test TRY NOW
சேர்மங்கள்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதிப்பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூயப்பொருள் சேர்மம் ஆகும்.
சேர்மங்கள் அவை இணைந்து உருவான
தனிமங்களின் பண்புகளில் இருந்து முற்றிலும்
மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
என்ற தனிமங்களின் அணுக்கள் ஒரு
குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து நீர் என்ற
சேர்மத்தினை உருவாக்குகின்றன. எனினும்
நீரானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின்
பண்புகளைக் கொண்டிருக்கவில்லை.
உதாரணமாக, அறை வெப்பநிலையில்
நீரானது திரவ நிலையிலும் ஹைட்ரஜன்
மற்றும் ஆக்சிஜன் வாயு நிலையிலும்
காணப்படுகின்றன. மேலும், ஆக்சிஜன்
எரிதலுக்குத் துணை புரிகிறது. ஆனால் நீர் ஒரு
தீ அணைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதேப்போல் சோடியம் மற்றும் குளோரின்
என்ற இரு தனிமங்களின் சேர்மம் சாதாரண
உப்பு (சோடியம் குளோரைடு) ஆகும். உப்பு
நமது உணவில் மிகப்பெரிய சுவை ஊட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்
தனித்தனியாகச் சோடியம் மற்றும் குளோரின். ஆகியவை விஷத்தன்மை கொண்டவை
மற்றும் நுகரும் தன்மையற்றவை.
சேர்மங்களின் பண்புகள்:
தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில்
இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
ஒரு சேர்மத்தின் பண்பு, அதனை
உருவாக்கிய தனிமங்களின் உண்மையான பண்புகளிலிருந்து
முற்றிலும் மாறுபடுகின்றன.
சேர்மங்களை இயற்பியல் முறையில்
பிரிக்க இயலாது. ஏனெனில், இவற்றின்
தனிமங்கள் வேதிப்பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன. சோடியம்
குளோரைடை வடிகட்டுதல் போன்ற
இயற்பியல் முறையால் பிரிக்க இயலாது ஏனெனில் குளோரின் ஒரு வாயுவாகும்.
சேர்மங்களை வேதியியல் முறையில்
மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க
முடியும்.