PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.
 
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவினை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி காணலாம்.
  • உன் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஓர் இலையை எடுத்துக் கொள்க.
  • அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து, அதன் எல்லைக் கோடுகளை ஒரு பென்சில்லைக் கொண்டு வரைந்து கொள்க.
  • இலையை நீக்கினால், அதன் எல்லைக் கோட்டை வரைபடத் தாளின் மீது காணலாம்.
12.svg
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் பரப்பு
  • இப்போது, இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணிக்கொள்க. இந்த எண்ணிக்கையை \(M\) எனக் கொள்க. 
  • பிறகு, பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணிக்கொள்க. இந்த எண்ணிக்கையை \(N\) எனக் கொள்க.
  • அடுத்து, பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணிக்கொள்க. இந்த எண்ணிக்கையை \(P\) எனக் கொள்க.
  • இறுதியாக, பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணிக்கொள் இந்த எண்ணிக்கையை \(Q\) எனக் கொள்க.
இப்போது:
  • \(M = 51\) செ. மீ
  • \(N = 11\) செ. மீ
  • \(P = 8\) செ. மீ
  • \(Q = 9\) செ. மீ
இலையின் பரப்பளவினை தோராயமாக பின்வரும் சூத்திரத்தின் மூலம் கண்டறியலாம்.
 
இலையின் தோராயமான பரப்பு =M+(ii)N+(ii)P+(ii)Q சதுர செ.மீ
 
இச்சூத்திரத்தைப் பயன்படுத்தி எந்த ஒரு ஒழுங்கற்ற வடிவமுள்ள தள பொருளின் பரப்பையும் காண முடியும்.
 
எனவே, இலையின் தோராயமான பரப்பு:
 
=M+(ii)N+(ii)P+(ii)Q
 
=i+(i)×i+(i)×i+(i)×i
 
=i+i+i+i=i
 
இலையின் தோராயமான பரப்பு \(=\)   மீ \(^2\) ஆகும்.
 
Important!
மேலே கொடுக்கப்பட்ட தீர்வானது உதாரணம் மட்டுமே ஆகும். இத்தீர்வில் பயன்படுத்திய எண்ணிக்கைகள் மாறுபடலாம்.