PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கீழே உள்ள ஒரு செய்முறை மூலம் அடர்த்தியைப் பற்றி மேலும் புரிந்து கொள்வோம்.

முதலில் ஒரு முகவையில் நீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் ஓர் இரும்புக் குண்டையும், ஒரு தக்கையையும் போட வேண்டும். நாம் காண்பது என்ன? இரும்புக் குண்டு மூழ்குகிறது; தக்கை மிதக்கிறது. இது ஏன் இவ்வாறு நடக்கிறது?
 
YCIND19052022_3749_Tamil.png
இரும்புக் குண்டு மூழ்குகிறது; தக்கை மிதக்கிறது
 
"எடை அதிகமான  பொருள்கள் நீரில் மூழ்கும்; எடை குறைந்த பொருள்கள் நீரில் மிதக்கும்” என்றால், எடை குறைந்த ஓர் உலோகக் காசு நீரில் எப்படி மூழ்கும்?

எடை மிகுந்த மரக்கட்டை நீரில் எப்படி  மிதக்கும்? 
 
YCIND19052022_3749_Tamil_2.png
எடை குறைந்த காசு மூழ்குகிறது; எடை மிகுந்த மரக்கட்டை மிதக்கிறது
 
நாம் அடர்த்தி பற்றி தெளிவாக புரிந்து கொண்டால், இக்கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கும்.

மரத்துண்டு அதே நிறை கொண்ட இரும்புத் துண்டைவிட அதிக கனஅளவினைப் பெற்றுள்ளது என அறிவோம்.
 
மேலும், மரத்துண்டு அதே கனஅளவினைக் கொண்ட இரும்புத் துண்டைவிட குறைந்த நிறையைப் பெற்றுள்ளது எனவும் தெரியும்.
ஒரு பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதனைத் தீர்மானிக்கும் அளவு "அடர்த்தி" எனப்படும். சமமான கனஅளவு கொண்ட பொருள்களில் அதிக நிறை திணிக்கப்பட்டிருந்தால், அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும். எனவே தான்  இரும்புத்துண்டின் அடர்த்தி மரத்துண்டின் அடர்த்தியை விட அதிகமாகும்.