PDF chapter test TRY NOW

ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை சூத்திரங்களின் மூலம் கண்டறிய முடியாது. எனவே, இத்தகைய பொருள்களின் பருமனை, நாம் ஒரு அளவிடும் குவளை மற்றும் நீரைக் கொண்டு எளிதாக அளக்க முடியும்.
செயல்பாடு
  • ஒரு அளவிடும் குவளையை எடுத்துகொள்ள வேண்டும். அதில் சிறிது நீரை ஊற்ற வேண்டும். ஆனால் குவளையை முழுவதுமாக நிரப்பக்கூடாது.
  • நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ள வேண்டும். அதனை \(V_1\) எனக் குறித்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.
  • நூலைப் பிடித்துக் கொண்டு, கல்லை நீரினுள் மூழ்கச் செய்ய வேண்டும். அவ்வாறு மூழ்கச்செய்யும் போது, கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 22.svg
ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமன்  
  • இப்போது, குவளையில் உள்ள  நீரின் மட்டம் உயர்ந்திருக்கும். அந்த நீரின் கனஅளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ள வேண்டும். அதனை \(V_2\) எனக் குறித்து கொள்ள வேண்டும்.
இப்போது கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கனஅளவிற்குச் சமமாக இருக்கும். 
 
எனவே, கல்லின் கனஅளவு \(=\) \(V_2 – V_1\) 
Important!
உங்களுக்கு தெரியுமா?
 
நம்மில் பலர் திரவங்களின் பருமனை அளக்க, வேறு சில அலகுகளும் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் சில கேலன் (Gallon), அவுன்ஸ் (Ounce) மற்றும் குவார்ட் (Quart).
 
\(1\) கேலன் \(=\) \(3785\) \(ml\)
\(1\) அவுன்ஸ் \(=\) \(30\) \(ml\)
\(1\) குவார்ட் \(=\) \(1\) \(l\)