PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅடர்த்தி என்பது ஓரலகு பருமனில் (\(1\) மீ \(^3\)) அப்பொருள் பெற்றுள்ள நிறையே அப்பொருளின் அடர்த்தி எனப்படும்.
ஒரு பொருளின் அடர்த்தி என்பது அப்பொருளின் ஓரலகு நிறைக்கு சமம்.
“\(m\)” நிறை கொண்ட ஒரு பொருளின் பருமன் “\(V\)” எனில், அதன் அடர்த்திக்கான சமன்பாடு.
அடர்த்தியின் SI அலகு கிகி/மீ \(^3\). அதன் CGS அலகு கி/செ.மீ \(^3\).
எல்ல பொருள்களும் ஒரே அடர்த்தி கொண்டவை அல்ல. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு அடர்த்தியைக் கொண்டிருக்கும். அதிக அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் “அடர்வான” அல்லது “அடர்வுமிகு” பொருள்கள் எனப்படும். குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் “தளர்வான” அல்லது “அடர்வுகுறை” பொருள்கள் எனப்படும்.
சில பொருள்களின் அடர்த்தி (அறை வெப்பநிலையில்)
நாம் பயன்படுத்தும் சில பொருள்களின் அடர்த்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இயல்பு | பொருள்கள் | அடர்த்தி \(\text {(கிகி/மீ}\)\(^3)\) |
வாயு | காற்று | \(1.2\) |
திரவம் | நீர் | \(1000\) |
திரவம் | பாதரசம் | \(13,600\) |
திண்மம் | மரம் | \(770\) |
திண்மம் | அலுமினியம் | \(2700\) |
திண்மம் | இரும்பு | \(7,800\) |
திண்மம் | தாமிரம் | \(8,900\) |
திண்மம் | வெள்ளி | \(10,500\) |
திண்மம் | தங்கம் | \(19,300\) |
Important!
உங்களுக்கு தெரியுமா?
சமையல் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் போன்றவை பார்ப்பதற்கு நீரை விட அடர்த்தி மிகுந்தவைகளாகத் தோற்றமளித்தாலும், அவற்றை விட நீர் அதிக அடர்த்தி கொண்டது ஆகும். விளக்கெண்ணெயின் அடர்த்தி \(961\) கிகி/மீ\(^3\) ஆகும்.
விளக்கெண்ணைய்யில் ஒரு துளி நீரை இடும்பொழுது, நீர்த்துளி மூழ்கும். ஆனால், நீரில் ஒரு துளி விளக்கெண்ணைய்யை இடும்பொழுது, அது மிதந்து நீரின் மீது ஒரு படலத்தை உருவாகும். எனினும், சில எண்ணெய் வகைகள் நீரை விட அதிக அடர்த்தி கொண்டவை ஆகும்.
அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகள் பின்வரும் அடர்த்தி முக்கோணத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு
அடர்த்தி \((D)\)
நிறை \((M)\)
கனஅளவு \((V)\)