PDF chapter test TRY NOW

திரவங்கள் வெளியில் அல்லது சூழிடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும், ஆகவே, திரவங்களும் ஒரு குறிப்பிட்ட பருமன் அல்லது கன அளவைப் பெற்று இருக்கும் . ஆனால், திரவங்களுக்கு நிலையான வடிவம் என்பது இல்லை.
shutterstock_205539937.jpg
அளவிடும்  உருளை
 
ஆகவே, திரவங்களின் கன அளவை திடப்பொருள்களுக்கு அளந்தது போல் அளக்க முடியாது. ஒரு திரவத்தை ஒரு கொள்கலனில் ஊற்றும்போது, திரவமானது கலனின் வடிவத்தையும், பருமனையும் பெறும்.
திரவத்தின் கன அளவு என்பது அது கலனில் எவ்வளவு இடத்தை நிரப்புகிறது என்பதே ஆகும். இதனை ஒரு அளவிடும் உருளை அல்லது அளவிடும் முகவை மூலம் நம்மால் அளக்கமுடியும்.
19.png
அளவிடும் முகவை
ஒரு திரவத்தின் கொள்ளவு என்பது அக்கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே அக்கலனின் “கொள்ளளவு” எனப்படுகிறது.
shutterstock_187194992.jpg
அளவிடும் குவளை
திரவத்தின் கன அளவு என்பது அது கலனில் நிரப்பும் அளவைக் குறிப்பது எனலாம் .
இதை நாம் அளவிடும் குவளையில் கொடுக்கப்பட்டிருக்கும் அளவீடுகளிலிருந்து நேரடியாகக் குறித்து கொள்ள முடியும். அதில் உள்ள அளவீடுகள் “\(ml\)” என்ற அலகில் குறிக்கப்பட்டு இருக்கும். இது மில்லி லிட்டர் என்பதைக் குறிப்பது ஆகும்.
லிட்டர் என்பது நாம் திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான அலகாகும்.
நாம் பருமனின் இந்த அலகினை புரிந்துக் கொள்ள, முதலில் லிட்டர் என்ற அலகைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
நாம் ஒரு பொருளின் அளவு செ.மீ இல் இருக்கும் போது, அதன் கனஅளவை கன செ.மீ.இல் குறிக்க வேண்டும். இந்த கன செ.மீ என்ற அலகை பொதுவாக \(cc\) (\(cubic\ cm\)) எனக் குறிப்போம்.
 
Important!
\(1\) லிட்டர்  (\(l\)) \(=\) \(1000\ cc\) ஆகும்.
\(1\) லிட்டர்\(=\) \(1000\ cc\) அல்லது கன செ.மீ \(^3\) (\(cm^3\)).
\(1000\) மில்லி லிட்டர்(\(ml\)) \(=\) \(1\) லிட்டர்.