PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தண்டின் மாற்றுருக்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம்.
  • தரைமேல் தண்டின் மாற்றுருக்கள்
  • தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள்
  • தரைகீழ்த் தண்டின் மாற்றுக்கள்
தரைமேல் தண்டின் மாற்றுருக்கள்
இலைத் தொழில் தண்டு
 
வறண்ட சூழ்நிலையில் வாழும் தாவரமாகும். இத்தாவரத்தின் தண்டு பருத்து காணப்படும். இது ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவைத் தயாரித்து கொள்கிறது. இதன் இலைகள் முட்களாக மாறி உள்ளன.
 
shutterstock_1886902747.jpg
கள்ளிச் செடி
தரையொட்டிய தண்டின் மாற்றுருக்கள்
சில தாவரங்களின் தண்டுகள் இனப்பெருக்கம் செய்வதற்காக தரையை ஒட்டி மண்ணில் வளர்கின்றன. இவை நான்கு வகைப்படும்.
 
i. ஓடு தண்டு – சில தாவரங்களின் கிடைமட்டத் தண்டு உடைந்து தரையின் மேல் பரப்பில் பல புதிய தாவரங்களை உருவாக்குகின்றன.
shutterstock_1068226031.jpg
வல்லாரை
  
ii. ஸ்டோலன் (தண்டின் மென்மையான இலை) – இத்தாவரத்தின் தண்டு கிடைமட்டமாக தரையின் மேற்பரப்பிலிருந்து வளைந்து மண்ணைத் தொட்டு வளரும் போது புதிய தாவரங்களை உருவாக்கும்.
shutterstock_210053074.jpg
காட்டு ஸ்ட்ராபெர்ரி
  
iii. தரைகீழ் ஓடு தண்டு (அல்லது) சக்கர் – இத்தாவரம் சிறிய மற்றும் மெலிந்த பக்கவாட்டுக் கிளைகள் மேல் நோக்கி வளரும் போது புதிய தாவரத்தை உருவாக்கும்.
 
2.png
சக்கர் - கிரைசாந்திமம்
  
iv. குட்டையான ஓடு தண்டு – இத்தாவரத்தின் தண்டு குட்டையான மற்றும் தடித்த கிளைகளைக் கொண்டது. இது தடித்த கணுவிடைப் பகுதிலிருந்து கொத்தான இலைகளையும், அதன் வேர்களையும் உருவாக்குகிறது. இது உடைந்து புதிய தாவரங்களை உருவாக்கும்.
shutterstock_2023920335.jpg
வெங்காயத் தாமரை