PDF chapter test TRY NOW
அணு எண்
ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் மொத்த எண்ணிக்கையே அந்த அணுவின் அணு எண் ஆகும். இது \(Z\) என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.
ஓர் அணுவின் அணு எண் தெரியுமானால் அவ்வணுவில் காணப்படும் எலக்ட்ரான்கள் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கையை நம்மால் கண்டறிய இயலும்.
Example:
- ஹைட்ரஜன் அணுக்கருவானது ஒரே ஒரு புரோட்டானைக் கொண்டுள்ளது. அணுக்கருவிற்கு வெளியே ஒரு எலக்ட்ரான் மட்டுமே சுற்றி வருகிறது. எனவே ஹைட்ரஜனின் அணு எண் (Z) 1 ஆகும்.
- ஹீலியம் அணுவானது அதன் அணுக்கருவினுள் இரண்டு புரோட்டான்களையும் அணுக்கருவிற்கு வெளியே இரண்டு எலக்ட்ரான்களையும் கொண்டுள்ளது. எனவே, அதன் அணு எண் (Z) 2 ஆகும்.
படத்தில் கொடுக்கப்பட்ட ஆக்சிஜனின் அணு அமைப்பினைக் காணவும். அதன் அணு எண் யாது?
Example:
ஆக்சிஜன் அணுக்கருவானது \(8\) புரோட்டானைக் கொண்டுள்ளது. அணுக்கருவிற்கு வெளியே \(8\) எலக்ட்ரான் மட்டுமே சுற்றி வருகிறது. எனவே ஆக்சிஜனின் அணு எண் (Z) 8 ஆகும்.
நிறை எண் (A) அல்லது அணு நிறை
ஒரு அணுவின் மொத்த நிறையும் அதன் அணுக்கருவினுள் காணப்படும்.
நிறை எண் என்பது அணுக்கருவினுள் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதலுக்குச் சமமாகும். நிறை எண் அல்லது அணுநிறை = புரோட்டான்களின் எண்ணிக்கை + நியூட்ரான்களின் எண்ணிக்கை (A = p + n).
Example:
- லித்தியம் அணுவானது \(3\) புரோட்டான்களையும், \(4\) நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. எனவே, அதன் நிறை எண் (A) \(=\) \(3 + 4 = 7\).
- சோடியம் அணுவானது \(11\) புரோட்டான்களையும் \(12\) நியூட்ரான்களையும் கொண்டுள்ளது. எனவே, அதன் நிறை எண் (A)\( =\) \(11 + 12 = 23\).
ஒரு தனிமத்தின் குறியீட்டை எழுதும்போது, அவற்றின் அணு எண் மற்றும் நிறை எண்ணும் எழுதப்படும்.
Example:
ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஆக்சிஜனின் குறியீடுகள் , , என்று எழுதப்படுகின்றன.