PDF chapter test TRY NOW
2. இருவாழ்விகள் (அ) ஆம்பீபியா
தவளை,தேரை
சிசிலியன், சாலமாண்டர்
- இவ்விலங்கினங்கள் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடியவையாக இருக்கின்றன.எனவே இவை இருவாழ்விகள் என அழைக்கப்படுகின்றன.
- இருவாழ்விகள் குளிர் இரத்தப்பிராணி வகையைச் சார்ந்தவை.
- இரண்டு ஜோடிக்கால்கள் உண்டு.
- பால் வழியில் இனப்பெருக்கம் செய்கின்றன.
Example:
தவளை, தேரை, சாலமாண்டர், சிசிலியன்
3. ஊர்வன (அ) ரெப்டைல்ஸ்
பல்லி, பாம்பு
நில ஆமை, முதலை
- குளிர் இரத்தப்பிராணி வகையைச் சார்ந்த இவ்விலங்குகள் நுரையீரல் மூலம் சுவாசிப்பவை ஆகும்.
- இப்பிராணிகளின் உடம்பு செதில்கள் போர்த்தியதாகக் காணப்படும்.
- மரங்களிலும் பாறைகளிலும் ஏறுவதற்கு ஏற்ற வகையில் ஐந்து விரல்கள் உடைய கால்கள் காணப்படுகின்றன.
- ஊரும் பிராணிகள் முட்டையிட்டு பெருகுகின்றன.
Example:
பல்லி, கடல் ஆமை, நில ஆமை, பாம்புகள், முதலை