PDF chapter test TRY NOW
முதுகு நாண் என்பது ஒரு உயிரினம் கருவில் இருக்கும் போதே உடலின் நடுமுதுகுப் பகுதியில் தோன்றும் நீண்ட கோல் போன்ற ஒரு உறுப்பாகும்.
இது சில விலங்கினங்களில் முதிர்ச்சி பெற்று முதுகெலும்புத் தொடராக உருவாகிறது. இந்த முதுகெலும்புத் தொடர் விலங்கின் உடலில் பிரதான சட்டகமாக அமைகிறது.
இவ்வகை விலங்கினங்கள் பின்வருமாறு, ஐந்து வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
- மீன்கள்
- இருவாழ்விகள்
- ஊர்வன
- பறவைகள்
- பாலூட்டிகள்
1. மீன்கள் (அ) பிஷ்ஷஸ்
சால்மன், முல்லட்
திலோப்பியா,சுறா
- நீரில் வாழும் இவ்வுயிர்கள்குளிர் இரத்தப்பிராணி வகையைச் சார்ந்தவை.
- மீன்களுக்கு முதுகு எலும்பு தொடர், தாடைகள் உண்டு.
- நீந்துவதற்கு ஏற்ற வகையில் படகு போன்ற உடல் அமைப்பு கொண்டவை.
- இதற்காக, இணையான பக்கத் துடுப்புகள் மற்றும் தனியாக அமைந்திருக்கும் மத்தியத் துடுப்புகள் உள்ளன.
- மீன்கள் பால் வழியில் இனப்பெருக்கம் செய்கின்றன.
Example:
சுறா, கட்லா, முல்லட், திலோப்பியா