PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவகைப்படுத்துதல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து அவற்றின் பண்புகளின் அடிப்படையில் குழுக்களாகப் பிரித்தல் ஆகும்.
வகைப்படுத்துதலின் சிறப்பு அம்சங்கள்
- பொருட்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் எளிதாகப் பிரித்தறிய முடிகிறது.
- ஒத்த பண்புடைய பொருட்கள் அதாவது குறைந்தபட்சம் ஒரு பண்பிலாவது ஒத்திருக்கும் பொருட்கள், ஒரே குழுவின் கீழ் வகைப்படுத்தப்படிருக்கும்.
- வேறுபட்ட பண்புடைய பொருட்கள் அதாவது குறைந்தபட்சம் ஒரு பண்பிலாவது வேறுபட்டிருக்கும் பொருட்கள், வெவ்வேறு குழுவின் கீழ் வகைப்படுத்தப்படிருக்கும்.
- வகைப்படுத்துதல் நம்மைச்சுற்றி உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
- புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருள் அல்லது உயிரினத்தை வகைப்படுத்துவதால், அது மற்றவைகளோடு எந்த தொடர்பில் இருக்கிறது எனக் கண்டறிய முடிகிறது.
உயிரியல் வகைப்பாட்டின் அவசியம்
- உயிரினங்களை சரியாக இனம் கண்டு கொள்ள இயல்கிறது.
- உயிரினத்தின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைத் தெரிந்துக் கொள்ள உதவுகிறது.
- உயிரினங்ககுக்கு இடையில் உள்ள தொடர்பினை உறுதி செய்ய முடிகிறது.
- வெவ்வேறு புவியியல் மற்றும் பருவநிலைகளில் வளரும் உயிரினங்களைப் பற்றிய தகவல்களைப் பெற இயல்கிறது.
- எளிமையான உயிரினங்களில் இருந்து சிக்கலான உயிரினங்கள் எவ்வாறு தோன்றின என்பது போன்ற ஆராய்ச்சிக்கு வழிவகை செய்கிறது.