PDF chapter test TRY NOW
7. கணுக்காலிகள் (அ) ஆர்த்ரோபோடா

நண்டு
- கண்டங்களாக உடல் பிரிக்கப்பட்டுள்ளன
- இவற்றின் புறச்சட்டகம் "கைட்டின்" என்னும் தடித்த புறத்தோலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
- இரு பால் உயிரிகளான கணுக்காலிகள் இணைக்கால்கள் மற்றும் இணையுறுப்புகள் பெற்றிருகின்றன.
Example:
நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி
8. மெல்லுடலிகள் (அ) மொலஸ்கா

நத்தை
- இவை உடற்கண்டங்கள் அற்றவை.
- மென்மையான உடல் அமைப்பு கொண்டிருக்கும் உயிரிகள் ஆகும்.
- இவற்றின் தலைப்பகுதி தசையால் அமைந்திருக்கும்.
- மேலும், பாதப்பகுதி மற்றும் உள்ளுறுப்பு தொகுப்பாக அமைந்துள்ளது.
- மான்டில் (அ) ஓடு கால்சியத்தினால் ஆனது.
- பால் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
Example:
கணவாய் மீன், நத்தை, ஆக்டோபஸ்
9. முட்தோலிகள் (அ) எக்கைனோடர்மேட்டா

நட்சத்திர மீன்
- கடலில் மட்டுமே வாழும் இவ்வுயிரிகளின் உடலில் முட்கள் காணப்படும்
- நீர்குழல் மண்டலம் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் உதவுகின்றன.
- குழாய்க்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
- பால் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன.
Example:
நட்சத்திர மீன், கடல் வெள்ளரி, கடல் அள்ளி