
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo4. தட்டை புழுக்கள் (அ) பிளாட்டிஹெல்மின்தஸ்

கல்லீரல் புழு, இரத்தப் புழு (Blood fluke)
- முதுகு நாண் இன்றி மேற்பக்கம் தட்டையாகக் காட்சி அளிப்பதால், இவை தட்டைப்புழுக்கள் என அழைக்கப்படுகின்றன.
- உடற்குழி அற்ற இவ்வுயிரினங்கள் ஒட்டுண்ணிகளாக விலங்குகள், மனிதர்கள் உடலுக்குள் வாழ்கின்றன.
- இவை பெரும்பாலும் இரு பால் உயிரிகள் ஆகும்.
Example:
பிளானேரியா, கல்லீரல் புழு, நாடாப்புழு, இரத்தப் புழு (Blood fluke)
5. உருளைப்புழுக்கள் (அ) நேமடோடா (அ) அஸ்கிஹெல்மின்திஸ்

அஸ்காரிஸ்
Important!
உடல் முழுவதும் ஒரே மாதிரியான பிரிவுகளாகத் தோன்றுவது கண்டங்கள் என அழைக்கப்படுகின்றது.
- உருளைப்புழுக்கள் இத்தகைய உடற்கண்டங்கள் இன்றி காட்சியளிக்கிறது.
- ஒட்டுண்ணிகளாக வாழும் இவை விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடலுக்குள் நோய்களை உண்டாகுகின்றன.
- இனப்பெருக்கம் பாலின முறையில் நடைபெறுகிறது.
Example:
அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்டஸ்
6. வளைத்தசைப் புழுக்கள் (அ) அனலிடா


மண்புழு, அட்டை
- மூவடுக்கு உயிரிகளான இவற்றின் உடல்கள் கண்டங்களாகப் பிரிக்கப்படுள்ளன.
- பெரும்பான்மையாக இருபால் உயிரிகளாகும், ஆனால் ஒற்றைப்ப்பாலியல் உயிரிகளும் உள்ளன.
Example:
மண்புழு, நீரிஸ், அட்டை