PDF chapter test TRY NOW
விலங்குலகம் (அனிமேலியா) பல மில்லியன் விலங்கின வகைகளை உள்ளடக்கியதாகும். நாள்தோறும் புதிய வகை விலங்கினங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.அவைகளுக்கு சரியான பெயரிடுவது பின்னாளில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க வகைப்பாட்டியல் உதவும்.
பண்புகள்
- விலங்குகள், யூகேரியோட்டுகள் அல்லது பல செல் உயிரிகள் ஆகும்.
- இவை, பிற சார்பு ஊட்டமுறையைப் பின்பற்றுகின்றன.
- விலங்குகளின் செல்களில், செல் சுவர் இல்லை, செல் சவ்வு மட்டுமே செல்லினைச் சூழ்ந்து உள்ளது.
- செல்லின் உள்ளே உட்கரு உறையினால் சூழ்ந்துள்ள உண்மையான உட்கரு உள்ளது, இவற்றின் சிறப்பம்சம் ஆகும்.
- பெரும்பான்மையான விலங்குகள் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
ஏறத்தாழ \(36\) தொகுதிகளையும் அதன் கீழ் வகுப்புகளையும் கொண்ட இரண்டு பெரும் துணை உலகங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை,
- முதுகெலும்பு அற்றவை - கடல் பஞ்சுகள், ஜெல்லி மீன்கள், புழுக்கள், நட்சத்திர மீன், பூச்சிகள்
- முதுகெலும்பு உள்ளவை - மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள், மனிதன், பாலூட்டிகள்
விலங்குகளின் வகைப்பாடு