PDF chapter test TRY NOW

இப்பகுதியில் எலக்ட்ரான்களின் ஓட்டத்தைப் பற்றியும், மரபு மின்னோட்டத்தைப் பற்றியும், மேலும் மின்னோட்டத்தை எப்படி அளவிடப்படுகிறது என்பதைப் தெரிந்துக் கொள்வோம்.
  
எலக்ட்ரான்களின் ஓட்டம்:
 
ஒரு மின்கலத்தில் எலக்ட்ரான்களின் ஓட்டம் என்பது மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை நோக்கி நடைபெறும். இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படும்.
 
YCIND20220805_4002_Electricity_05 (2).png
எலக்ட்ரான்களின் ஓட்டம்
    
மரபு மின்னோட்டம்:
 
எலக்ட்ரான்களின் கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை, நகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் எனக் அறிவியல் அறிஞர்கள் நம்பினார்கள். நேர் மின்னூட்டங்களின் இயக்கமே  மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது. மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் இருக்கும்.
 
YCIND20220805_4002_Electricity_04 (2).png
மரபு மின்னோட்டம்
  
மின்னோட்டத்தை அளவிடுதல்:
 
மின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால் அளவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் '\(+\)' மற்றும் '\(–\)' குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும்.
 
shutterstock1658901358.jpg
அம்மீட்டர்
ஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டுமே இணைக்கப்படும்.
மில்லி ஆம்பியர், மைக்ரோ ஆம்பியர் போன்றவையும் மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் போன்ற அலகு முறைகள் ஆகும்.
  • \(1\) மில்லி ஆம்பியர் \((mA)\) \(=\) \(\text{10}^{-3}\) ஆம்பியர், அல்லது
    \(\frac{\text{1}}{\text{1000}}\) ஆம்பியர் ஆகும்.
  • \(1\) மைக்ரோ ஆம்பியர் \((µA)\) \(=\) \(\text{10}^{-6}\) ஆம்பியர், அல்லது\(\frac{\text{1}}{\text{1000000}}\) ஆம்பியர் ஆகும்.
shutterstock1691037151.jpg
மைக்ரோ ஆம்பியர் (µA)