PDF chapter test TRY NOW
இப்பகுதியில் நீரோட்டத்தை மின்னோட்டத்தோடு ஒப்பிட்டு மின்னழுத்தைப் புரிந்துக் கொள்வோம். மேலும் மின்னழுத்தை அளவிடம் கருவியைப் பற்றியும் அறிந்துக் கொள்வோம்.
நீரானது, எப்பொழுதும் உயர் மட்ட நிலையில் இருந்து தாழ் மட்ட நிலையை நோக்கி பாயும். அதேபோல், மின்னூட்டங்கள் எப்போதும் உயர் மின்அழுத்த புள்ளியிலிருந்து தாழ் மின்னழுத்தப் புள்ளியை நோக்கி பாயும்.
நீரோட்டம்
- ஓரு மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் பயணிக்க ஆற்றல் தேவைப்படும். மேலும், மின்னழுத்த வேறுபாடு (\(v\)) இருந்தால் மட்டுமே கடத்தியின் வழியே மின்னோட்டமானது பாயும்.
ஓரலகு மின்னூட்டத்தை ஓரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவே மின்னழுத்த வேறுபாடு என்படும்.
மின்னழுத்த வேறுபாட்டின் அலகு
மின் எச்சரிக்கை குறியீடுகள்
மின்மாற்றி அருகே அல்லது ரயில் தண்டவாளங்களை கடக்கும் பகுதியில் மேலே குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை பலகையில் மின் எச்சரிக்கை தொடர்பாக ஒரு சில குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் பலமுறை பார்த்து இருப்போம்.
ஏன் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
மின்னழுத்த வேறுபாட்டினை வோல்ட் என்ற அலகு கொண்டு குறிக்கப்படுகிறது.
வோல்ட் மீட்டர்
மின்னழுத்த வேறுபாட்டின் \(SI\) அலகு வோல்ட் ஆகும். இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை வோல்ட் மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.