PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் மின்தடை \((R)\), மின்தடை எண் \((ρ)\) மற்றும் மின்கடத்துத்திறன் \((σ)\) ஆகியவை பற்றி அறிந்துக் கொள்வோம்.
மின்தடை \((R)\)
நீரோட்டம் பாயும் வீதத்தை ஓர் சிறிய பாதையானது எவ்வாறு பாதிக்கின்றதோ அதுபோலவே, மின் சுற்றில் மின்தடையானது மின்னூட்டம் பாயும் வீதத்தை பாதிக்கும்.
மின்தடை
ஓர் மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.
-
ஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகமாக இருந்தால் அம்மின்உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயக்க அதிக அளவு மின்னழுத்த வேறுபாடு தேவைப்படும்.
- ஒரு மின் உறுப்பின் மின்தடை என்பது, மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும் மற்றும் மின்உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதமே ஆகும்.
மின்னழுத்தத்திற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பும் அதிகம் ஆகும்.
-
மின்தடையின் \(SI\) அலகு ஓம் ஆகும்.
மின்கடத்துத்திறன் \((σ)\)
ஒரு கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின்கடத்துத்திறன் எனப்படும்.
இது பொதுவாக, \(σ\) \(\text{(சிக்மா)}\) என்ற கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
- மின்கடத்துத்திறனின் அலகு \(\frac{\text{சீமென்ஸ்(s)}}{\text{மீட்டர் (m)}}\) அல்லது
\(\text{சீமென்ஸ் மீட்டர் }^{-1}\) ஆகும்.
மின்தடைஎண் \((ρ)\)
பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பே அப்பொருளின் மின்தடை எண் '\(ρ\)' (ரோ) எனப்படும். மின்தடை எண்ணை தன் மின் தடை எண் எனவும் அழைக்கப்படுகிறது.
- மின்தடை எண்ணின் \(SI \)அலகு ஓம் மீட்டர் \((Ωm)\) ஆகும்.
\(20\)\(°C\) வெப்பநிலையில் பொருட்களின் மின்கடத்துத்திறன் மற்றும் மின்தடை எண்களின் மதிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. வெள்ளி
- மின்தடை எண் -
- மின்கடத்துத்திறன் -
2. தாமிரம்
- மின்தடை எண் -
- மின்கடத்துத்திறன் -
3. துண்டாக்கப்பட்ட தாமிரம்
- மின்தடை எண் -
- மின்கடத்துத்திறன் -
4. அலுமினியம்
- மின்தடை எண் -
- மின்கடத்துத்திறன் -