PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் முதன்மை மின்கலமான உலர் மின்கலனைப் பற்றி அறிந்துக் கொள்ள போகிறோம்.
உலர் மின்கலன்
- உலர் மின்கலனானது, பெரும்பாலான மின் சாதானங்களில் பொதுவாகப் பயன்படும் ஒரு வேதி மின் கலனின் எளிய வரைமுறை ஆகும்.
- இது சிறிய வடிவிலான எளிதில் எடுததுச் செல்லதக்க ஓரு மின் மூலம் ஆகும்.
- இது \(1887\) ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டை சார்ந்த "யேய் சுகியோவோல்" உருவாக்கப்பட்டது.
அறிவியல் அறிஞர் -யேய் சுகி்யோ
உலர் மின்கலன்கள் பொதுவாக சுவர் கடிகாரங்கள், டார்ச்கள் மற்றும் பொம்மைகள் போன்ற பல மின் சாதனங்களுக்கு மின்கலன்களாகப் பயன்படும்.
மின்கலத்தின் குறுக்குவெட்டு தோற்றம்
- உலர் மின்கலன்கள் எடுத்துச் செல்வதற்காக வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும்
- இது எதிர்மின்வாய் அல்லது ஆனோடாக செயல்படும் துத்தநாக மின்தடை உள்ளடக்கி இருக்கும்.
- ஆமோனியம் குளோரைடு மின்பகுளி ஆக செயல்படும்.
ஒரு கரைசல்களின் அயனியாக மாறும் தன்மை கொண்ட பொருள் மின்பகுளி ஆகும் இவை மின்னோட்டத்தைக் கடத்தும் கூடிய திறன் பெற்று இருக்கும்.
- துத்தநாக குளோரைடு அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரத்தை பராமரிக்க பயன்படும்.
- படத்தில் உள்ளப்படி, நடுவில் ஒரு வெண்கல மூடிக்கொண்டு மூடப்பட்ட கார்பன் தண்டானது வைக்கப்பட்டு இருக்கும். இத்தண்டு நேர்மின்வாய் அல்லது கேதோடாக செயல்படும்.
- ஒரு மெல்லிய பையில் மிக நெருக்கமாக மரக்கறி மற்றும் மாங்கனீசு டை ஆக்சைடு(\(MnO_2\)) நிரம்பிய கலவையால் சூழப்பட்டு இருக்கும்.
- மின்கலத்தில் மாங்கனீசு டை ஆக்சைடு(\(MnO_2\)) ஆனது மின்முனைவாக்கியாகச் செயல்படும்.
- துத்தநாகப் பண்டமானது படத்தில் உள்ளபடி மூடப்பட்டு இருக்கும்.
- வேதிவினைவின் விளைவாக உருவாகும் வாயுவை வெளியேற்ற ஏதுவாக அதில் ஒரு சிறிய துளைப் போடப்பட்டு இருக்கும்.
வேதியியல் செயல்பாட்டின் போது வாயுக்கள் வெளியேற அனுமதிக்கும் சிறிய துளைகளை கொடுக்கப்பட்டுள்ளன. மின்கலனுள் நிகழும் வேதி வினையானது லெக்லாஞ்சி மின்கலத்தில் உள்ளதைப் போன்று இருக்கும்.
மின்கலன்
உலர் மின்கலன் உண்மையில் உலர்ந்ததா?
Important!
உலர் மின்கலன் உலர்ந்ததாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அது உலர்ந்ததாக இல்லை. உலர் மின்கலத்தில் உள்ள எலக்ட்ரோலைட் ஒரு பேஸ்ட் வடிவத்தில் உள்ளது. ஆனால், அது மற்ற வகை மின் கலன்களின் திரவங்களில் உள்ளது. உலர் மின்கலன் சுவர் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலன்கள் உலர் மின்கலனுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.