PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் மின்னோட்டங்கள் உருவாக்கும் மூலங்கள் மற்றும் மின் வேதிக்கலன்கள் அல்லது மினகலன்களைப் பற்றியும், மின்கலன்களின் வகைகள் – முதன்மை மின்கலன்கள் மற்றும் துணை மின்கலன்களை பற்றியும், முதன்மை மின்கலன்களுக்கும் துணை மின்கலன்களுக்குமான வேறுபாட்டை பற்றியும் அறிந்துக் கொள்வோம்.
நாம் அதிக அளவு மின் பயன்பாட்டிற்கு வெப்ப மின் கலன்களை பயன்படுத்துகிறோம். வெப்ப மின்கலன் இரு முனைகளை கொண்டு இருக்கும். வெப்ப மின்கலங்களை பயன்படுத்தப்படும் போது மின்கலனுள் மின்னூட்டத்தை உருவாக்கக்கூடிய வேதிவினை நடைபெறும்.
மின்கல குறியீடு
மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு, மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.
நம் அன்றாட வாழ்வில் தொலை இயக்கி, ரோபோ பொம்மைகள், பொம்மை கார்கள், கடிகாரம், மற்றும் கைப்பேசி ஆகியவற்றின் செயல்பாட்டிற்காக மின்கலன்கள் மற்றும் மின்கல அடுக்குகள் பயன்படுகிறது.
எல்லா சாதனங்களும் மின்னாற்றலை உருவாக்கினாலும், பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்களை இரு வகைப்படுத்தலாம் அவைகள் முறையே.
- முதன்மை மின்கலன்கள்
- துணை மின்கலன்கள்
முதன்மை மின்கலன்கள்
டார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மின்கலத்திற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். முதன்மை மின் கலங்களின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியாது.
முதன்மை மின்கலன்
துணைமின்கலன்கள்
துணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் உருவாகும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகும். அவைகளை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியும்.
துணை மின்கலன்
லித்தியம் உருளை மின்கலன்கள், பொத்தான் மின்கலன்கள் (button cells) கார அமிலமின்கலன்கள் ஆகியன பயன்பாட்டில் உள்ள மற்ற வகையான மின்கலன்கள் ஆகும்.
இங்கு, முதன்மை மின்கலன்களுக்கும் துணை மின்கலன்களுக்குமான வேறுபாட்டை கீழே காணலாம்.
முதன்மை மின்கலன்
- முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீளாவினை ஆகும்.
- முதன்மை மின்கலனை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியாது.
- இது சிறிய டேப்ரி கார்டர்கள் , சைக்கிள்கள், பொம்மைகள், கை மின் விளக்குகள் போன்ற சிறிய சாதனங்களை இயக்கப்பயன்படுகிறது.
Example:
எளிய வோல்டா மின்கலன், டேனியல் மின்கலன் , மற்றும் லெக்லாஞ்சி மின்கலன், மற்றும் உலர் மின்கலன் ஆகியவை முதன்மை மின்கலன்கள் ஆகும் .
துணை மின்கலன்
- துணை மினகலனிற்குள் நடைபெறும் வேதிவினை ஓர் மீள்வினை ஆகும்.
- துணை மின்கலன்களை மீண்டும் மின்னேற்றம் செய்ய முடியும்.
- இவை மொபைல் , தொலைபேசிகள், கேமராக்கள், கணினிகள் மற்றும் அவசர விளக்குகள் போன்ற சாதனங்களை இயக்க பயன்படுகிறது.
Example:
காரிய அமில சேர்ம மின்கலன் , எடிசன் சேர்ம மின்கலன், மற்றும் நிக்கல் - இரும்பு சேர்ம மின்கலன் ஆகியவை துணை மின்கலன்கள் ஆகும்.