PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநாம் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை கண்டு உணர முடியாது. ஆனால், ஒரு கம்பியின் வழியே பாயும் மின்னோட்டத்தை ஒரு குழாயின் வழியே பாயும் நீரோட்டத்தைப்போல் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும். மின்னோட்டத்துக்கும் நீரோட்டத்திற்குமான ஒப்புமையை இப்போது நாம் பார்ப்போம்.
மின் கம்பியின் வழியே பாயும் மின்னோட்டம்
ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும்.
- இந்த நீர் பாய்ச்சும் இயந்திர அமைப்பானது, ஓர் மூடிய குழாயின் வழியே நீரை வெளியேற்றும் ஒரு பம்ப் ஒன்றை உள்ளடக்கி இருக்கும்.
நீரோட்டம்
- ஒரு குழாயானது மின்சுற்றில் உள்ள கம்பி போலும் பம்ப் ஆனது மின்கலம் போலும் செயல்பட்டு, பம்பினால் உருவாக்கப்படும் அழுத்தம் ஆனது, குழாய் வழியே நீரை இயங்கச் செய்கிறது.
- குழாயில் உருவாகும் அழுத்தமானது, சுற்றின் வழியே எலக்ட்ரான்களை இயங்கச் செய்யும் மின் அழுத்தத்திற்கு சமமாக இருக்கும் .
மின்னோட்டமும் நீரோட்டமும்
- ஒரு குழாயினுள் தூசு மற்றும் துரும்புகள் படிந்திருந்தால், அவை நீரோட்டத்தை தடைசெய்வதோடு மட்டுமல்லாமல், குழாயின் ஒரு முனைக்கும் மற்றொரு முனைக்கும் இடையே அழுத்த வேறுபாட்டிலும் மாற்றத்தை ஏற்ப்படுத்தும்.
- அதே போல் மின்சுற்றில் அமைக்கப்படும் மின்தடையானது, மின்னோட்டம் பாய்வதை தடுப்பதோடு மட்டும் இல்லாமல் ஒரு முனைக்கும் மற்றோரு முனைக்கும் இடையே மின் அழுத்த வேறுபாட்டை ஏற்படுத்தும். இதனால் மின் தடையின் குறுக்கே ஆற்றல் இழப்பு ஏற்பட்டு, அது வெப்பமாக வெளிப்படுகிறது.