PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇப்பகுதியில் மின்னோட்டத்தினால் மின்சுற்றில் ஏற்ப்படும் முக்கிய விளைவுகளைப் பற்றி அறிந்துக் கொள்ளப் போகிறோம்.
மின்னோட்டத்தின் மூன்று மிக முக்கிய விளைவுகள் முறையே
- வெப்ப விளைவு
- காந்த விளைவு
- வேதி விளைவு
வெப்ப விளைவு
ஓர் கம்பியின் வழியே மின்னோட்டம் பாயும் போது மின்னாற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும்.
Example:
நிக்ரோம் அவ்வகையானப் பொருளுக்கு எடுத்துக்காட்டாகும். நிக்ரோம் என்பது நிக்கல், இரும்பு மற்றும் குரோமியம் சேர்ந்த கலவை ஆகும்.
மின் விளக்கு
மின்னோட்டத்தின் வெப்ப விளைவின் அடிப்படையில் பல்வேறு மின்சாதனங்கள் வேலை செய்கின்றன. அவைகளில் சிலவற்றை கீழேக் காண்போம்.
வெந்நீர் கொதிகலன்
மின்விளக்கு, வெந்நீர்கொதிகலன், மூழ்கும் நீர்கொதிகலன் ஆகியவை இவ்வகையான விளைவினை அடிப்படையாகக் கொண்டவை ஆகும்.
மின் இஸ்திரிப் பெட்டி
இச்சாதனங்களில் அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டிருக்கும்.
மின்னோட்டத்தின் விளைவினால் வெப்பம் உருவாக்கப்படும் நிகழ்வே மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எனப்படும்.