PDF chapter test TRY NOW
நிலைமாற்றம் என்பது ஒரு பொருள் திட, திரவ, வாயு ஆகிய ஏதேனும் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் நிகழ்வு ஆகும்.
பனிக்கட்டி உருகுதல் நிகழ்வு எளிய இயற்பியல் மாற்றத்தில் ஏற்படும் நிலை மாற்றம் நாம் படித்திருக்கிறோம்.

உருகுதல்
சில நிலை மாற்றங்கள்:
1. உருகுதல் - திண்மத்திலிருந்து திரவத்திற்கு மாறுவது
2. ஆவியாதல்- திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது
3. உறைதல் - திரவத்திலிருந்து திண்மத்திற்கு மாறுவது
4. ஆவி சுருங்குதல்-வாயுவிலிருந்து திரவத்திற்கு மாறுவது
5. பதங்கமாதல்- திண்மத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது
வெப்பக் கொள் நிகழ்வு:
உருகுதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்றவை நிகழ வெப்பம் செலுத்தப்படுவதால் இவை வெப்பக் கொள் நிகழ்வுகளாகும். வெப்பக் கொள் நிகழ்வு என்பது மூலக்கூறுகளின் வேகம் அதிகரிப்பதால் அவை வேகமாக நகரும்.
வெப்ப உமிழ் நிகழ்வு:
வெப்பக் கொள் நிகழ்வின் எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால் மூலக்கூறுகளின் வேகம் குறைந்து அவை மெதுவாக நகரும் இத்தகைய நிகழ்வுகள் வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.

பின்வரும் இயற்பியல் மாற்றங்களை பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்வோம்
உருகுதல்:
ஒரு குவளையில் உள்ள பனிக்கட்டி (Ice Cubes) அல்லது ஒரு கிண்ணத்தில் உள்ள பனிக்கூழினை ( Ice Cream) அறை வெப்பநிலையில் வைக்கும்பொழுது பனிக்கட்டி / பனிக்கூழ் உருகுவதால் அதனைச் சுற்றி குட்டை போல் நீர் தேங்கி இருக்கும் அதன் காரணம் குவளையில் உள்ள பனிக்கட்டி சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தைப் பெற்று உருகி நீராக மாறுகிறது.

பனிக்கூழ் உருகுதல்
இதிலிருந்து நாம் அறிவது யாதெனில்,
(உருகுதல் நிகழ்வு)
(உறைதல் நிகழ்வு)
உருகுதல் மற்றும் உறைதல்:
ஒரு பொருளை வெப்பப்படுத்துதல் மூலம் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது உருகுதல் ஆகும். மாறாக, ஒரு பொருளை குளிர்விக்கும் போது திரவ நிலையில் இருந்து திண்ம நிலைக்கு மாறும் நிகழ்வு உறைதல் ஆகும்.