PDF chapter test TRY NOW

உங்கள் உடலின் வெப்பநிலையினை கணக்கிடுதல்.
  • கிருமி நாசினி திரவத்தினைக் கொண்டு முதலில் உங்களின் வெப்பநிலைமானியினை கழுவிக் கொள்ள வேண்டும்.
  • வெப்பநிலைமானியின் முனையினை நன்கு கையில் பிடித்துக் கொண்டு சிலமுறை உதற வேண்டும்.
  • இதன் மூலம் பாதரசமானது கீழ்மட்டத்திற்கு இறங்கும். அதன் மட்டமானது \(35°C\) (\(95°F\)) க்கு கீழ் உள்ளதா என்பதனை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
  • இப்போது வெப்பநிலைமானியினை உங்கள் நாக்கிற்கு அடியிலோ அல்லது தோள்பட்டைக்கு அடியிலோ வைக்க வேண்டும்.
  • ஒரு நிமிடத்திற்கு பிறகு வெப்பநிலைமானியினை எடுத்து அளவீட்டினை குறிக்க வேண்டும். இந்த அளவீடு உங்கள் உடலின் வெப்பநிலையினை குறிக்கும்.
உங்கள் உடலின் வெப்பநிலை \(=\) \(°C\)
Important!
குறிப்பு: காய்ச்சல் இல்லாதவரின் உடல் வெப்ப நிலையை மட்டும் அளக்க வேண்டும்.