PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉயிரினம் என்பது, பல உறுப்பு மண்டலங்களின் ஒருங்கமைவினால் உருவானதாகும். உறுப்பு மண்டலம், பல உறுப்புகளாலும், உறுப்புகள் என்பது திசுக்களின் கூட்டமைவினாலும், மேலும், பல செல்களின் சேர்க்கையினால் திசு உருவாகிறது, என்று இதற்கு முந்தைய பகுதியில் படித்தோம். இப்பாட பகுதியில், அவை ஒவ்வொன்றையும் குறித்து சற்று விரிவாகக் காண்போம்.
உயிரினங்களின் வரிசைப்பாடு
உயிரினங்கள்:
உயிரினங்களின் சீரான செயல்பாட்டிற்குப் பலவகை உறுப்பு மண்டலங்கள் ஒன்று சேர்ந்து உடலின் பணிகளை மேற்கொள்கின்றன.
Example:
சுவாச மண்டலம், சீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் கழிவு நீக்க மண்டலம்
உறுப்பு மண்டலம்:
உடலில் பல உறுப்புகள் ஒன்றாக இணைந்து உறுப்பு மண்டலமாக மாறுகின்றன. இவை தனிப்பட்ட செயல்பாடுகளைச் செய்யக் கூடிய திறன் கொண்டவை ஆகும்.
Example:
- சுவாச மண்டலம் என்பது, நாசித் துவாரங்கள், நாசி அறைகள், காற்று குழாய் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் ஒன்று சேர்ந்தவையாகும்.
- செரிமான மண்டலம், என்பது வாய், நாக்கு, தொண்டை, தொண்டைக் குழி, உணவுக் குழல், இரைப்பை, சிறு மற்றும் பெருங்குடல்கள் போன்ற பல உறுப்புகளின் ஒருங்கமைவு ஆகும்.
மனிதரின் உறுப்பு மண்டலங்கள்
விலங்குகள் போலவே, தாவரங்களிலும் பல உறுப்புகள் இணைந்து, உறுப்பு மண்டலங்களாக மாறி செயல்படுகின்றன.
Example:
தாவரங்களின் வேர் அமைப்பில், முதன்மை வேர், இரண்டாம் நிலை வேர் மற்றும் மூன்றாம் நிலை வேர் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வேரின் உதவியால் தாவரம் நீர், கனிமம் போன்றவற்றைக் கடத்துகின்றன.
தாவரங்களின் வேர் அமைப்பு
உறுப்பு:
பலவகை திசுக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களைச் செய்யக் கூடிய ஓர் அமைப்பாக மாறுகின்றது. அதுவே உறுப்பு எனப்படும்.
- மனித உடலில் கண், இதயம், வயிறு மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகள் உள்ளன.
- தாவரங்களில் வேர், இலைகள், தண்டு மற்றும் பூக்கள் போன்ற உறுப்புகள் உள்ளன.
உறுப்புகள் பல திசுக்கள் சேர்ந்து உருவானவை ஆகும்.
மனித உடல் உறுப்புகள் மற்றும் தாவரத்தின் உறுப்புகள்