PDF chapter test TRY NOW
முதன்மை திரையில் பலவகையான கருவிகள் பயன்படுத்துகின்றன அவைகள் முறையே:
1. தூரிகை (Paint brush)

- இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம்.
- வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டும் வரையலாம்.
2. முத்திரை கருவி (Stamp tool)

- இக்கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.
3. அம்புக்குறிகள் (Arrows)

- இடது மற்றும் வலது அம்புக்குறியைப் பயன்படுத்தி இரண்டு பக்கமும் நகர்ந்து போகலாம்.
4. கோடுகள் (Lines)

- இக்கருவியினைப் பயன்படுத்தி கோடுகள் வரையலாம்.
5. வடிவங்கள் (shapes)

- இக்கருவியைப் பயன்படுத்தி நிரப்பப்பட்ட அல்லது நிரப்பப்படாத வடிவங்களை வரையலாம்.