PDF chapter test TRY NOW
1. பனுவல் (Text)

- இக்கருவியைப் பயன்படுத்தி எழுத்துகளைத் தட்டச்சு செய்யலாம்.

பனுவல் பயன்படுத்தும் திரை
2. விந்தைக் கருவி (Magic tool)

- விந்தைகருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.

- வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவைத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தோ அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்.


விந்தைக் கருவிகளை பயன்படுத்தும் திரை
3. அழிப்பான் (Eraser)

இக்கருவி வண்ணத்தூரிகையை போலவே இருக்கும். இதனை இழுத்து அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம்.

அழிப்பான் பயன்படுத்தும் திரை
4. முன்செயல் நீக்கல் (Undo)

- இக்கருவியினைப் பயன்படுத்தி முன்னர் செய்த செயலை நீக்கலாம்.
5. செயல் மீட்டல் (Redo)

- இக்கருவியினைக் கொண்டு நீக்கம் செய்த ஒருசெயலை மீண்டும் நிகழச்செய்யலாம்.