PDF chapter test TRY NOW
‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டு ஆகும். இது தேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கக் கூடிய ஒரு இலவச மென்பொருள் ஆகும். கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

Tux Math -ன் முதன்மைத் திரை

Tux Math - ன் தலைப்புத் திரை
- கணிதக் கட்டளை பயிற்சிக் கழகம் (Math Command Training Academy), இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் ஐம்பது கணிதப்பாடங்களின் பட்டியல் தோன்றும்.
- இங்கு ஒற்றை இலக்க எண்களை உள்ளீடு செய்யும் எளிய கணக்குத் தொடங்கி பெருக்கல் வகுத்தல் கலந்த கடினமான கணக்குகள் வரை விளையாட்டு நீண்டு கொண்டே போகும்.
Example:
9 \times ?\ =\ 95
- இதில் வெற்றி பெற வேண்டும் எனில் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- சரியான விடை அளிக்கப்படும் ஒவ்வொரு பாடமும் தங்க நட்சத்திரத்திரத்தால் குறிக்கப்படும்.