PDF chapter test TRY NOW

மனிதனின் கண்ணானது, கோள வடிவம் உடைய உடலின் மிக முக்கிய மற்றும் சிக்கலான உறுப்பு ஆகும். இது, தசைத்திசு, இணைப்புத்திசூ மற்றும் நரம்புத்திசுக்களால் ஆனது.

கண்ணின் பொதுப் பயன்கள், பார்ப்பதும் மற்றும் நிறங்களைப் பிரித்து அறிதலும் ஆகும். மேலும், மனித உடலின் உயிர்க் கடிகாரத்தின் இயக்கத்திற்கும் இது பெரிதும் உதவுகிறது.

மனிதனின் கண், புகைப்படக் கருவி (camera-type) கண்கள் வகையைச் சேர்ந்தது. அதாவது, ஒரு பொருளின் ஒளியானது, புகைப்படச் சுருளின் மீது பட்டு பிம்பமாக தெரிவது போல், நமது கண்ணின் ஒளித்திரையான ரெட்டினாவின் உதவியால், பிம்பமாக காண இயலுகிறது.

இது, சாத்தியமாவது ஒளியை ஒருங்கிணைத்தல், குவித்தல் மற்றும் ஒளியை லென்ஸ் வழியே செலுத்தல் ஆகிய வழிகள் மூலம் ஆகும். 

 

eye-g9c06fea77_1280.jpg

மனிதக் கண்

 

Important!
குறிப்பு: மனிதனின் கண்ணால் \(10\) மில்லியன் முதல் \(12\) மில்லியன் நிறங்களை வேறுபடுத்திக் காண இயலும். 
கண்ணின் அமைப்பு
  
மனிதக் கண் இரு அமைப்புகள் இணைந்தது. அவை, 
  • புற அமைப்பு
  • உள்ளமைப்பு
புற அமைப்பு

Design - YC IND (1).jpg

மனிதக் கண்ணின் புற அமைப்பு

  

ஸ்கிளிரா (விழிவெளிப் படலம்)

  • இது கண்ணின் உறுதியான, தடித்த வெண்மைப் பகுதியாகும்.
  • கண்ணின் உள்பாகங்களைப் பாதுகாக்கிறது.

கஞ்ஜங்டிவா

  • இது மெல்லிய, ஒளி ஊடுருவும் விழிவெளிப் படலத்தை மூடியுள்ள சவ்வாகும்.
  • மேலும், இது கண்களைப் ஈரமாகவும், தெளிவாகவும் இருக்க உதவுகிறது.

கார்னியா (விழி வெண்படலம்)

  • இது ஒரு தோல் படலம். இது கருவிழி மற்றும் கண் பாவையின் மீது படர்ந்துள்ள ஒளி ஊடுருவும் படலம் ஆகும்.
  • இது ஒளியை விலகடையச் செய்கிறது.

ஐரிஸ் (கருவிழி)

  • மனிதக் கண்ணின் நிறத்திற்கு காரணமான நிறமிகள் கொண்ட திசுப்படலம் ஆகும்.
  • மேலும், இது கண்பாவையின் அளவை, கண்ணின் உள்ளே நுழையும் ஒளியின் அளவிற்கேற்ப கட்டுப்படுத்துகிறது.

கண்பாவை

  • கண்ணின் மையத்தில் உள்ள, ஒளியைக் கண்ணின் வழியே அனுப்பும் சிறு துளையாகும்