PDF chapter test TRY NOW
திசுக்கள் என்பவை, ஒரு குறிப்பிட்ட பணியை செய்கின்ற, செல்களின் தொகுப்பு ஆகும்.
இவை, அமைப்பினைப் பொறுத்து இரு வகைப்படும்.
1. எளிய திசுக்கள் - இவை ஒரே வகையான செல்களால் ஆனா தொகுப்பு ஆகும். மேலும், இவை ஒருமயத் (homogeneous) தன்மைக் கொண்டவை.
Example:
சுரப்பி எபிதீலியல் திசு
2. கூட்டுத் திசுக்கள் - வெவ்வேறு வகையான செல்களின் கூட்டமைப்பு கூட்டுத் திசுக்கள் எனப்படும். இவை, பன்மயத் (heterogeneous) தன்மைக் கொண்டவை.
Example:
தோல் திசுக்கள்
திசுக்களின் வகைகள்
திசுக்களின் பணி மற்றும் அமைப்பினைப் பொறுத்து நான்கு வகையாகப் பிரிக்கபடுகிறது.
திசுக்களின் வகைகள்
- எபிதீலியல் திசு: உறையீட்டுச் செல்கள் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பாதுக்காப்பிருக்கான திசுக்கள் ஆகும்.
- தசைத் திசுக்கள்: இவை உடலின் அசைவு மற்றும் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன.
- இணைப்புத் திசுக்கள்: உடலின் அனைத்து அமைப்புகளையும் இணைக்கும் திசுக்கள் ஆகும்.
- நரம்புத் திசுக்கள்: இவைகள் உடலின் நரம்புத் தூண்டல்களைக் கடத்தும் மிக முக்கிய திசுக்கள் ஆகும்.
உறுப்புகள்
ஒன்றுக்கும் மேற்பட்ட திசுக்கள் ஒன்றிணைந்து, ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் உறுப்புகள் உருவாகின்றன. மூளை, இதயம், கல்லீரல், நுரையீரல், கண் மற்றும் பல ஒரு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.
- குடலின் உட்புறம், எபிதீலியல் திசுக்காளால் ஆனது. இத்திசுக்கள் நொதிகளைச் சுரக்கின்றன. மேலும், ஊட்டச் சத்துகளை உறிஞ்சுகின்றன. எபிதீலியத் திசுக்கள், தசைத்திசுக்களின் அடுக்களால் ஆனது. மேலும், உணவானது உணவுக்கூழ் அலையியக்கத்தின் (peristaltic) முறையில் கீழ்நோக்கி நகர்த்த இத்தசைத்திசுக்கள் பயன்படுகின்றன.
- இரத்தத் திசுக்கள், உறிஞ்சப் பட்ட ஊட்டச் சத்துக்களை உடலின் பல்வேறு பாகங்களுக்குக் கடத்துகின்றன.
- நரம்புத் திசு மூளையுடன், குடல் திசுக்களை இணக்கின்றன.
Example:
மனித உடல் உறுப்புகள்
இனி, மனிதர்களின் கண் பற்றி விரிவாகக் காணலாம்.
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/401_Types_of_Tissue.jpg/1024px-401_Types_of_Tissue.jpg