PDF chapter test TRY NOW

உயிரினங்கள் உயிர் வாழ உணவு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
 
நாம் வீட்டில் அம்மா உணவு சமைப்பதை  தினமும் பார்த்து இருக்கிறோம், அவர்  அடுப்பில் வைத்து வெப்பப்படுத்துவதன் மூலமாக அரிசி, குழம்பு மற்றும் காய்கறிகளை சமைக்கின்றார். போதுமான அளவு வெப்பத்தினை  கொண்டு சில வேதி வினைகள் நடைபெற்று உணவு தயாரிக்கப்படுகிறது.
 
BeFunkycollage3w3264.jpg
வெப்பத்தின் பயன்கள்
 
வெப்பத்தின் மூலமாக நடைபெறும் வேதிவினையை ஆய்வகத்தில் நடத்தி நாம் அறியலாம்.
 
செயல்பாடு 1:
 
ஒரு உலர்ந்த சோதனை குழாயில் லெட் நைட்ரேட் உப்பினை எடுத்து அதனை சுடரில் காட்டி வெப்பப்படுத்தும் போது, அது படபடவென்று வெடித்து செம்பழுப்பு  நிற வாயு (நைட்ராஜன் டை ஆக்ஸைடு) வெளிவருவதைக் காணலாம்.
 
செயல்பாடு 2:
 
இதேப் போல தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக்கல் பாறைகள் வெப்பப்படுத்தப்பட்டு சுட்ட சுண்ணாம்பு (கால்சியம் ஆக்ஸைடு) உருவாகிறது.
 
எனவே, சில வேதி வினைகளை வெப்பத்தின் மூலமே நிகழ்த்த இயலும். இத்தகைய வினைகள் வெப்ப வேதி வினைகள் அல்லது வெப்பச்சிதைவு வினைகள்  என்று அழைக்கப்படுகின்றன.
வேதிவினைகளின் போது வெப்பம் வெளிப்பட்டால் அது வெப்ப உமிழ் வினைகள் என்றும்,வேதிவினைகளின் போது வெப்பம் எடுத்துக்கொள்ளப்பட்டால் அது வெப்ப கொள் வினைகள் என்றும் அழைக்கப்படும்.
 இவ்வாறு,
வெப்பத்தின் மூலமாக நடைபெறும் வேதிவினைகள் வெப்பவேதி வினைகள் என்று அழைக்கப்படும்.