PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமின்சாரத்தினைக் கொண்டு நிகழத்தப்படும் வேதி வினைகளைப் பற்றி அறிந்தது உண்டா?
நாம் மின்சாரத்தினை சமைத்தல், விளக்கை ஒளிரச்செய்தல், அரைத்தல், தொலைக்காட்சி பார்த்தல் போன்ற பல வகைகளில் பயன்படுத்துகின்றோம்.
மின்சாரத்தின் பயன்கள்
இதே மின்சாரத்தினைப் பயன்படுத்தி வேதி வினைகளும் நிகழ்த்தப்படுகின்றன.
மின்சாரத்தின் பயன்கள்
இவ்வாறு மின்சாரம் மூலமாக நடைபெறும் வேதி வினைகள் தொழிற்சாலைகளில் முக்கிய பங்காற்றுகின்றது.
நீர் மூலக்கூறு
நீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் இணைந்து உருவாகிறது. நீரில் சிறிது சல்ப்யூரிக் அமிலம் சேர்த்து அதில் மின்சாரத்தினை செலுத்தும் போது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்கள் வெளிவருகின்றன.
சோடியம் குளோரைடு
இதே போன்று பிரைன் எனப்படும் அடர் சோடியம் குளோரைடு கரைசல் வழியே மின்சாரம் செலுத்தும் போது சோடியம் ஹைட்ராக்சைடுடன் சேர்ந்து குளோரின் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் வெளிவருகின்றன. இம்முறையே தொழிற்சாலைகளில் பெரிதும் குளோரின் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதிலிருந்து நாம் அறிவது,
மின்சாரத்தினைக் கொண்டு மட்டுமே நடைபெறும் வேதிவினைகள் மின்வேதி அல்லது மின்னாற்பகுத்தல் வினைகள் என்று அழைக்கபப்டும்.
Important!
குறிப்பு:
மைக்கல் பாரடே என்ற அறிவியலாளர் \(19\) ஆம் நூற்றாண்டில் "எலக்ட்ரோலைசிஸ்" (மின்னாற்பகுத்தல்) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
இது எலக்ட்ரான் மற்றும் லைசிஸ் என்ற இரு சொற்களின் கலப்பு ஆகும். எலக்ட்ரான் என்றால் மின்சாரம் என்றும், லைசிஸ் என்றால் பகுத்தல் என்றும் பொருள் ஆகும்.
Reference:
https://publicdomainvectors.org/en/free-clipart/Water-molecule-vector-drawing/16306.html