PDF chapter test TRY NOW
சூரிய ஒளி:
சூரிய ஒளி நமது வாழ்வின் முக்கிய ஒளி ஆதாரம் ஆகும். மனிதனின் அனைத்து செயல்கள் மற்றும் தாவரங்கள், சூரிய ஒளியைச் சார்ந்து தான் இருக்கின்றன. எனவே இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒளியின் மூலம் நடைபெறும் வேதிவினைகள் ஒளி வேதிவினைகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஒளி சேர்க்கை:
தாவரங்களில் நடைபெறும் ஒளிச் சேர்க்கையில் (Photo
synthesis: Photo - ஒளி, Synthesis - உற்பத்தி), தாவரங்கள் சூரிய ஒளியின் முன்னிலையில் கார்பன் டை ஆக்ஸைடு, மற்றும் நீர் உடன் சேர்ந்து ஸ்டார்ச் எனும் உணவை உற்பத்திசெய்கின்றன. இதில், சூரிய ஒளி கார்பன் டை ஆக்சைடுக்கும்
நீருக்கும் இடையே வேதிவினையை நிகழ்த்தி,
இறுதியில் அதன் மூலம் ஸ்டார்ச் உருவாகிறது.
இவ்வாறு ஒளியைக் கொண்டு நிகழ்த்தப்படும்
வேதிவினைகள் ஒளி வேதிவினைகள் எனப்படும்.
ஒளிச்சேர்க்கை வினைகள்
குறிப்பு: சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் மூலக்கூறுகளை சிதைத்து ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் ஆக்ஸிஜன் அணுவை உருவாக்குகின்றன. இந்த ஆக்ஸிஜன் அணு, மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறு உடன் சேர்ந்து மீண்டும் ஓசோனை உருவாக்குகிறது.
வினைவேகமாற்றி
சில நேரங்களில் நாம் உணவு உண்ணும் பொழுது சிறிதளவு ஓம நீரைக் குடிக்குமாறு பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டா? ஏனெனில் ஓம நீர் உணவு செரிப்பதை வேகப்படுத்துகிறது.
வேதிவினைகளில், சில வேதிப் பொருள்கள் வினையில் ஈடுபடாமல் வினையின் வேகத்தை மாற்ற மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன .இவையே வினை வேகமாற்றிகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரிக்க உலோக இரும்பு வினைவேக மாற்றியாக செயல்படுகின்றது. யூரியா தயாரிப்பதில் அம்மோனியா தான் அடிப்படை பொருள் ஆகும்.
யூரியா உரமிடுதல்
தூளாக்கப்பட்ட நிக்கல் வனஸ்பதி நெய் (டால்டா) தயாரிக்க வினைவேகமாற்றியாக பயன்படுத்தப்படுகின்றது.
குறிப்பு:
வினைவேகமாற்றிகள் ஒரு வினையின் வேகத்தை மாற்ற மட்டுமே உபயோகிக்கப்படுகின்றன. இவை எந்த ஒரு வினையிலும் ஈடுபடுவது இல்லை.
வினைவேக மாற்றியினால் ஒரு வினையின் வேகம் மாற்றப்பட்டால் அந்த வினைகள் வினைவேக மாற்ற வினைகள் என்று அழைக்கப்படும்.
உயிரி வினைவேக மாற்றிகளுக்கு எடுத்துக்காட்டு: என்சைம்கள் மற்றும் ஈஸ்ட்டுகள்.
நொதித்தல்:
இது ஒரு வேதிவினை ஆகும். உணவில் இருக்கும் கார்போ ஹைட்ரேட் என்சைம் மூலமாக அமிலம் மற்றும் ஆல்கஹாலாக மாறுவதே நொதித்தல் ஆகும்.
கோதுமை மாவில் சிறிது ஈஸ்ட்டு சேர்க்கப்படும் போது ஈஸ்ட்டில் இருந்து என்சைம்கள் உருவாகி நொதித்தலின் வேகம் அதிகப்படுத்தப்படுகிறது.