
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇரண்டு கரைசல் அல்லது திரவ நிலையில் உள்ள பொருள்கள் சேரும்பொழுது, அவை வினைபுரிந்து புதிய விளைபொருள்களை உருவாக்குகின்றன.
தேநீர் மற்றும் கொட்டை வாடிநீர் (காபி) இவற்றின் தயாரிப்பு முறையே இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
பாலை காஃபி வடிநீர் (டிக்காசன்) அல்லது காஃபி துளுடன் சேரக்கும் போது காஃபி என்ற வினைவிளை பொருள் நமக்கு கிடைக்கின்றது.

தேநீர் மற்றும் காஃபி
இங்கு பால், காஃபி துகள்களும் சேர்ந்து இருந்தால் எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது. கரைசல் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே இவை வினை புரியும்.
ஒரு சோதனை குழாயில் சிறிது திண்ம நிலையில் உள்ள சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு எடுத்து கொள்ளவும்.
எந்த ஒரு மாற்றமும் நிகழ்வது இல்லை என்பதை கவனிக்கவும்.
விளைவு
திண்ம நிலையில் இந்த பொருள்கள் வினை புரிவது இல்லை.
ஒரு சோதனை குழாயில் சிறிது கரைசல் நிலையில் உள்ள சில்வர் நைட்ரேட் மற்றும் சோடியம் குளோரைடு எடுத்து கொள்ளவும்.
இரண்டு கரைசல்களும் சேரும் பொழுது வெண்மை நிற வீழ் படிவு உருவாவதை காணவும்.
விளைவு
வேதி வினை நடைபெற்று புதிய பொருள்கள் உருவாகின்றன.
மேற்கண்ட பொருள்களில் வேதிவினை, அவை கரைசல் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமே நிகழ்கிறது என்பதை அறியலாம்.