PDF chapter test TRY NOW
முந்தைய பாடஙகளில், ஒரு ஒளிக்கதிர் காற்றில் ஒரு பளபளப்பான மேற்பரப்பின் மேல் விழும் போது, அது காற்றில் எதிரொளிக்கும் என்பதை பார்த்தோம்.
இருப்பினும், ஒளி ஊடுருவும் பொருளின் மீது ஒளியானது படும்போது அது முழுவதுமாக எதிரொளிக்கப்படாமல், ஒரு பகுதி மட்டுமே எதிரொளிக்கிறது. மறுபகுதி ஒளியானது உட்கவரப்படுகிறது. பெரும்பகுதி ஒளியானது, ஒளி ஊடுருவும் பொருளின் வழியே கடந்து செல்கிறது.
ஒளியானது காற்றின் வழியாக \(3 \times 10^8\) என்ற திசைவேகத்தில் பயணிக்கிறது. ஆனால் ஒளியானது நீர் அல்லது கண்ணாடி வழியே இதே அளவு திசைவேகத்தில் பயணிக்காது.
ஏனென்றால், நீர் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் அடர்த்தி அதிகமாகும். எனவே அவை ஒளிக்கதிர்களுக்கு ஓர் தடையை ஏற்படுத்துகின்றன.
எனவே, காற்று போன்ற அடர்வு குறைவான ஊடகத்திலிருந்து, கண்ணாடி போன்ற அடர்வு அதிகமான ஊடகத்திற்கு ஒளிக்கதிர்கள் செல்லும்போது அவை நேர்க்கோட்டுப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்றன.
ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது, கதிர் விழும் புள்ளியில் குத்துக்கோட்டைப் பொருத்து விலகிச் செல்லும் நிகழ்வே ’ஒளிவிலகல்’ என அழைக்கப்படுகிறது.
அடர்வு குறை ஊடகத்திலிருந்து அடர்வு மிகு ஊடகத்திற்கு ஒளியானது செல்லும்போது செங்குத்துக்கோட்டை நோக்கி அது விலகலடையும்.
அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்கு ஒளியானது செல்லும்போது செங்குத்துக்கோட்டை விட்டு அது விலகிச் செல்லும்.