PDF chapter test TRY NOW

1. சில தனிமங்களிலுள்ள குறியீடுகள் இலத்தீன்/கிரேக்கப் பெயரின் அடிப்படையில் \(11\)  தனிமங்களின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
கிரேக்க மற்றும் இலத்தீன் எழுத்துக்களின் குறியீடுகள்:
 
1. சோடியம் - நேட்ரியம் - \(Na\)
2. பாதரசம் (மெர்க்குரி) - ஹைட்ரார்ஜிரம் - \(Hg\)
3. பொட்டாசியம் - கேலியம் - \(K\)
4. காரீயம் - பிளம்பம் - \(Pb\)
5. இரும்பு - ஃபெர்ரம் - \(Fe\)
6. வெள்ளீயம் - ஸ்டேனம் - \(Sn\)
7. தாமிரம் (காப்பர்) - குப்ரம் - \(Cu\)
8. ஆண்டிமணி - ஸ்டிபியம் - \(Sb\)
9. வெள்ளி (சில்வர்) - அர்ஜெண்டம் - \(Ag\)
10. டங்ஸ்டன் - உல்ஃப்ரம் - \(W\)
11. தங்கம் (கோல்டு) - ஆரம் - \(Au\)
 
2. சில தனிமங்களின் பெயர்கள் முக்கியமான நாடு, புகழ் பெற்ற அறிவியல் அறிஞர்கள், நிறம், புரான கதாபாத்திரம், கோள்கள் போன்ற முறைகளைக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.
 
நாடு மற்றும் அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் குறியீடுகள்:
 
1. அமெர்சியம் - \(Am\) - அமெரிக்கா (நாடு)
2. யூரோப்பியம் - \(Eu\) - ஐரோப்பா (கண்டம்)
3. நொபிலியம் - \(No\) - ஆல்ஃபிரட் நோபல் (அறிவியல் அறிஞர்)
4. அயோடின் - \(I\) -ஊதா (கிரேக்க மொழியில் ஊதாவைக் குறிக்கும் சொல்)
5. பாதரசம் (மெர்க்குரி) - \(Hg\) - மெர்க்குரி எனும் கடவுள் (புராண கதாபாத்திரம்)
6. புளுட்டோனியம் - \(Pu\) - புளுட்டோ (கோள்)
7. நெப்டியூனியம் - \(Np\) - நெப்டியூன் (கோள்)
8. யுரேனியம் - \(U\) - யுரேனஸ் (கோள்)
 
ஒரு தனிமத்தின் குறியீட்டை எழுதுதல்:
 
தனிமத்தின் குறியீட்டை எழுதும்போது பின்வரும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்:
 
1. ஒரு தனிமத்தின் குறியீட்டில் ஒரே ஆங்கில எழுத்து மட்டுமே இருந்தால், அதனை பெரிய எழுத்தில் (Capital letter) எழுத வேண்டும்.
 
2. இரண்டு எழுத்துக்களைக் குறியீடாகக் கொண்ட தனிமங்கள் இருந்தால் ஆங்கிலத்தில் முதல் எழுத்தைப் பெரிய எழுத்திலும் (Capital letter), தொடர்ந்து வரும் இரண்டாவது எழுத்தைச் சிறிய எழுத்திலும் (Small letter) எழுத வேண்டும்.
 
எ.கா:   அ. \(N\)           ஆ. \(Ca\)