PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
தற்கால தனிமங்களின் குறியீடுகளைத் தீர்மானிக்கும் முறை:
 
i. பொதுவாக தனிமங்களில் முக்கியமாக அலோகங்களின் ஆங்கிலப் பெயரின் முதல் எழுத்து தற்காலத்தில் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
ஆங்கில முதல் எழுத்தைக் குறியீடாகக் கொண்ட தனிமங்கள்:
  
தனிமம்
குறியீடு
போரான்
\(B\)
கார்பன்
\(C\)
ஃபுளுரின்
\(F\)
ஹைட்ரஜன்
 \(H\)
அயோடின்
\(I\)
நைட்ரஜன்
\(N\)
ஆக்சிஜன்
\(O\)
பாஸ்பரஸ்
\(P\)
கந்தகம் (சல்பர்)
\(S\)
வனடியம்
\(V\)
யுரேனியம்
\(U\)
இட்ரியம்
\(Y\)
 
ii. ஒரு தனிமத்தில் உள்ள முதல் எழுத்தைப் போல் மற்றொரு தனிமத்திலும் இருந்தால் அத்தனிமத்தின் ஆங்கிலப்பெயரிலுள்ள முதல் எழுத்துடன் இரண்டாம் எழுத்தைச் சேர்த்து குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு குறிக்கும் போது முதல் எழுத்து பெரிய எழுத்தாகவும் இரண்டாம் எழுத்து சிறிய எழுத்தாகவும் குறிக்கப்படுகிறது.
 
ஒரே ஆங்கில முதல் எழுத்தைக் குறியீடாகக் கொண்ட தனிமங்கள்:
  
தனிமம்
குறியீடு
அலுமினியம்
 \(Al\)
பேரியம்
 \(Ba\)
பெரிலியம்
 \(Be\)
பிஸ்மத்
 \(Bi\)
புரோமின்
 \(Br\)
கோபால்ட்
\(Co\)
ஹட்ரஜன்
  \(H\)
ஹீலியம்
\(He\)
நிக்கல்
\(Ni\)
நியான்
\(Ne\)
சிலிக்கான்
\(Si\)
ஆர்கான்
\(Ar\)
 
iii. ஒரு தனிமத்திலுள்ள முதல் இரண்டு எழுத்துக்களும் மற்றொரு தனிமத்தில் முதல் இரண்டு எழுத்துக்களும் ஒன்றாக இருந்தால், அத்தனிமத்தின் ஆங்கிலப் பெயரிலுள்ள முதல் எழுத்துடன் இரண்டாவது எழுத்தோ அல்லது மூன்றாவது எழுத்தோ சேர்த்து குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
ஒரே முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களைக் குறியீடாகக் கொண்ட தனிமங்கள்:
  
தனிமம்
குறியீடு
ஆர்கான்
\(Ar\)
ஆர்சனிக்
 \(As\)
குளோரின்
\(Cl\)
குரோமியம்
\(Cr\)
கால்சியம்
\(Ca\)
காட்மியம்
\(Cd\)
மெக்னீசியம்
\(Mg\)
மாங்கனீசு
\(Mn\