
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉலோகங்களும் - அலோகங்களும்
- ஒரு நாட்டின் வளமைக்கான குறியீடு அந்நாடு உற்பத்தி செய்யும் உலோகங்கள் மற்றும் அலோகங்களின் அளவைப் பொருத்து அமைகிறது.
- ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள தங்கத்தின் அளவைக் கொண்டு அளவிடப்படுகிறது.
தனிமங்கள் அவற்றின் பண்புகளின் அடிப்படையில் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன:

உலோகங்கள்:
இரும்பு, தாமிரம், தங்கம், வெள்ளி போன்றவை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் உலோகங்கள் ஆகும்.
உலோகங்களின் இயற்பியல் பண்புகள்:
1. உலோகங்கள் சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் திட நிலையில் காணப்படும்.

2. பொதுவாக உலோகங்கள் கடினமானவை.

3. உலோகங்கள் அதிக அடர்த்தியைப் பெற்றுள்ளன.

4. உலோகப் பளபளப்பு - அனைத்து உலோகங்களும் பளபளப்பானவை.

5. உலோகங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றுள்ளன.

6. தகடாக மாறும் பண்பு - உலோகங்களைச் சுத்தியால் அடித்து மிக மெல்லியத் தகடாக மாற்றலாம். எடுத்துக்காட்டு: அலுமினியம்.

7. கம்பியாக நீளும் பண்பு - உலோகங்களை இழுத்து மெல்லியக் கம்பியாக மாற்றிவிடலாம்.
எடுத்துக்காட்டு: தாமிரக் கம்பிகள்.

8. உலோகங்கள் வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தக்கூடியவை.

9. ஒலியை எழுப்பும் பண்பு - உலோகங்களைத் தட்டும்போது அவை தனித்துவமான ஒலியை எழுப்பும். எடுத்துக்காட்டு: ஆலய மணிகள்.
