PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉயிரினங்களின் முக்கிய சிறப்பம்சங்களுள் ஒன்று இயக்கமாகும். இவை முதுகெலும்பு உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை செயல்பாடாகத் திகழ்கிறது. விலங்குகள் அனைத்தும் ஒரே மாதிரியான இயக்கத்தை வெளிப்படுத்துவதில்லை மாறாக அவை ஒவ்வொன்றும் வேறுபட்ட இயக்கத்தையே வெளிப்படுத்துகின்றன. இக்கோட்பாட்டில் பல்வேறு விலங்குகளின் இயக்கத்தைக் குறித்துக் காண்போம்.
மண்புழு:
மண்புழு
- மண்புழுவின் உடலானது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வளையங்களாலானது. மேலும், இவை நீளவும் சுருங்கவும் ஏற்ற தசைகளை தன்னகத்தே கொண்டுள்ளன.
- இதன் உடலின் அடிப்பகுதியில் சீட்டா எனப்படும் தசைகளுடன் இணைக்கப்பட்ட நீட்சிகள் காணப்படுகின்றன. இந்நீட்சிகள் மண்புழுவிற்குத் தரையைப் பற்றிக்கொண்டு நகர்ந்து செல்ல உதவுகிறது.
- மண்புழு தனது இயக்கத்தின் போது முதலில் உடலின் முன்பகுதியை விரிவடையச் செய்கிறது. அதன் பின்னர் பின்பகுதியைத் தரையில் நிலைபெறச் செய்த பிறகே முன்பகுதியை நிலைபெறச் செய்து பின்புறத்தைத் தளர்வடைய செய்கின்றது.
- அதன் பின்பு தன் உடலின் நீளத்தைக் குறைத்து பின்பகுதியை முன்னோக்கி இழுக்கத் தொடங்குகின்றது. இதன் காரணமாகச் சிறிது தூரம் நகரும்.
- இவ்வாறு தசை சுருக்கம் மற்றும் தளர்வுகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் மண்புழு நகர்ந்து ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும். இதன் உடலில் சுரக்கும் ஒரு வகை பிசுபிசுப்பான திரவம் இயக்கத்திற்கு உதவுகின்றன.
மண்புழுவின் இயக்கங்கள்
கரப்பான் பூச்சி:
- கரப்பான் பூச்சிக்கு மூன்று ஜோடி இணைந்த கால்கள் உண்டு. அக்கால்கள் அவை நடக்க, ஓட மற்றும் மேலே ஏறிச் செல்வதற்கும் உதவுகிறது.
- அவை, பறப்பதற்கேற்ற வகையில் இரண்டு ஜோடி இறக்கைகளையும் கொண்டுள்ளன.
- பெரிய, வலுவான தசைகள் அதன் கால்களுடைய இயக்கத்திற்குக் காரணமாய் இருக்கின்றன.
- மேலும் இதன் உடல் முழுவதும் "கைட்டின்" என்னும் ஒளி பாதுகாப்பு பொருளால் மூடப்பட்டிருக்கும்.
- கைட்டின் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரிந்து போய் அதன் சீரான உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
கரப்பான் பூச்சி