PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபறவைகள்:
- பறவைகளில் பல விதம். சில தரையில் நடக்கும். சில பறக்கும் மேலும் சில வகை பறவைகள் நீரில் நீந்தும் திறனையும் பெற்றுள்ளன.
இவை இறகுகளால் மூடப்பட்ட படகு வடிவ சீரான உடலமைப்பைக் கொண்டுள்ளன. - இவற்றின் உடலமைப்பில் எலும்புகளின் எடை குறைவாகவும், மிகுந்த வலுவுடனும் காணப்படும்.
- மேலும், இவை காற்றறைகளுடன் கூடிய மிகவும் எடைக் குறைவான காற்றழுத்த எலும்புகளைக் கொண்டுள்ளன. இந்த எலும்புகள் உள்ளீடற்றும், காற்று இடைவெளிகளுடனும் காணப்படுகின்றன.
காற்றழுத்த எலும்புகளின் உள் கட்டமைப்புகள்
- அவற்றின் பின்னங்கால்கள் நகங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு ஜோடி பின்னங்கால்களில் உள்ள கூர்மையான நகங்களின் உதவியுடன் இவை மரக் கிளைகளை நன்கு பற்றிக் கொண்டு நடக்கவும், அமரவும் செய்கின்றன.
பறவை நகங்களின் உதவியுடன் கிளையில் அமர்ந்துள்ளக் காட்சி
- இதன் முன்னங்கால்கள் நன்கு வளர்ச்சியடைந்து பறப்பதற்கு ஏற்ற ஒரு ஜோடி இறக்கைகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளதை காண்பிக்கும் படம்
- இவற்றுக்கு வலுவான சிறப்பு மார்பு தசைகள் உள்ளன, அதன் மார்பெலும்புகள் இறக்கைகளை மேலும், கீழும் அசைக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் காற்றின் அழுத்தத்தையும் தாங்க உதவும் வகையில் அமைந்திருக்கின்றன.
- பறப்பதற்கு உதவும் வகையில் நீண்ட இறகுகள் அதன் வால் மற்றும் இறக்கைகளில் காணப்படுகின்றன.
- பறவையின் வாலானது அது பறக்கும் திசை மற்றும் இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பறவைகள் பறத்தல்