PDF chapter test TRY NOW
மீன்:
மீன்கள்
மீன்கள் நீர் வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளான நன்னீர் அல்லது கடல் நீரில் வாழ்கின்றன. மீன்களின் இயக்கம் குறித்து இந்தக் கோட்பாட்டில் விரிவாகக் காண்போம்.
மீனின் பாகங்கள்
மீன்களில் இருக்கும் துடுப்புகள் நீச்சலுக்கு உதவுகின்றன. அவை இயக்கத்தின் போது ஒரு மீனின் நிலையைப் பராமரிக்கவும், தண்ணீரில் மீன்களை வழிநடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. அதோடு மீன்களின் உந்துதலுக்கும் உதவுகின்றன. மீன்களில் இரண்டு இணையான துடுப்புகளும் மேலும் ஒரு இணையற்ற துடுப்பும் உள்ளன.
மீனின் தலை, உடல் மற்றும் வால் ஆகியவை ஒன்றிணைந்து படகு வடிவத்தை உருவாக்குகின்றன. இத்தகைய உடல் வடிவம் நீர் எதிர்ப்பைக் குறைக்கிறது இவ்வமைப்பு மீன்கள் தண்ணீரில் எளிதாகவும், வேகமாகவும் தங்கு தடையின்றி நீந்தவும் உதவுகின்றன. இவற்றின் வலுவான தசைகளும் நீந்துவதற்கு உதவி செய்கின்றன.
மீனின் படகு போன்ற உடல்
இவை நீந்தும் போது முன்பகுதி ஒரு புறம் வளைந்தும் அதன் பின் பகுதியான வால் பகுதி அதற்கு எதிர்த் திசையிலும் இருக்கும். இதுவே அடுத்த நகர்வில் மாறி வரும் அதாவது முன்பகுதி எதிர்ப் பக்கமாக வளைந்தும் அதன் வால் பகுதி எதிர்த்திசையிலும் நகரும்.
திசையை மாற்றவும், தண்ணீரில் தங்கள் உடலைச் சமநிலைப்படுத்தவும் மீன்களில் வலுவான வால் துடுப்புகள் உள்ளன. மீன் முன்னோக்கி நகரும் வகையில் தண்ணீரை இடமாற்றம் செய்வதற்கும், இவை பயன்படுத்தப்படுகின்றன. "காடல்" என்னும் வால் துடுப்பு திசையை மாற்ற உதவும்.
Important!
மீன்களின் உடலிலுள்ள தசைகள் மற்றும் செதில்கள் அவற்றின் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவைகள் கூரான உடலமைப்பைப் பெற்றிருப்பதால் நீரின் ஓட்டத்துடன் சீராகச் செல்கின்றன.
மீன்களில் காணப்படும் வெவ்வேறு வகையான செதில்கள்