PDF chapter test TRY NOW
பறவைகள் இரண்டு வகைகளில் பறப்பதை நம்மால் காண இயலும். அவை;
- மிதந்து ஊர்தல்
- கீழ்நோக்கிய அசைவு
மிதந்து ஊர்தல்:
இவ்வகை பறத்தலின் போது பறவைகளின் இறக்கைகள் மற்றும் வால் விரிந்து இருக்கும். அதோடு, அவை காற்றின் உதவியுடன் மேலும், கீழும் பறந்து செல்லும்.
மிதந்து ஊர்தல்
கீழ்நோக்கிய அசைவு:
கீழ்நோக்கிய அசைவு முறை ஒரு தீவிர பறத்தல் செயலாகும். இவ்வகை பறத்தலின் போது பறவைகள் அதன் சிறகைக் கீழ்நோக்கி அசைத்துக் காற்றை உந்தி தள்ளுகின்றன. மேலும், இந்த நிகழ்விற்கு அவைகள் இறக்கைகளைப் பயன்படுத்துகின்றன.
கீழ்நோக்கிய அசைவு
பாம்பு:
- பாம்பின் உடலில் அதிக எண்ணிக்கையில் முதுகெலும்புகள் உள்ளன.
- அதன் அடுத்தடுத்துள்ள முதுகெலும்புகள், விலா எலும்புகள் மற்றும் தோல் ஆகியவை மெல்லிய உடல் தசைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன.
- பாம்பு நகரும் போது பக்கவாட்டில் பல வளைவுகள் உண்டாகி உடலை உந்தி தள்ளும்.
- தரைப்பரப்பில் உருவாக்கின வளைவுகளைத் தொடர்ந்து உந்தி தள்ளியே அவை முன்னோக்கி நகர்ந்து செல்லும். பாம்புகளில் நடைபெறும் இவ்வியக்கம் சறுக்கு இயக்கம் எனப்படும். மேலும் சில வகை பாம்புகளால் நீரில் நீந்தவும் இயலும்.
பாம்புகளின் இயக்கம்
Important!
பாம்புகளுக்குக் கால்கள் கிடையாது. மாறாக, தசைகள் மற்றும் செதில்களைப் பயன்படுத்தியே அவை நகர்கின்றன.