PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுதல்நிலை பால் பண்புகள்
பருவமடைதல் காலகட்டத்தில் இருபாலரின் உடலிலும் இனப்பெருக்க உறுப்புகள் முழுமையாக செயல்பட துவங்கும் மற்றும் முழுமையாக வளர்ச்சி அடையும்.
ஆண்
- விந்தகங்கள் பெரிதாக வளர்ச்சி அடையும். இது ஆணின் இனபெருக்க சுரப்பி ஆகும்.
- இனப்பெருக்க உறுப்பின் நீளமும் அளவும் அதிகரிக்கும்.
பெண்
- அண்டகங்களின் எடை அதிகரிக்கும். இது பெண்ணின் இனப்பெருக்க சுரப்பி ஆகும்.
- பெண்ணின் உடலில் உள்ள கருப்பையின் அளவு பெரிதாகும்.
Important!
- ஆணின் முதல்நிலை பால் உறுப்பு விந்தகம் ஆகும்.
- பெண்ணின் முதல்நிலை பால் உறுப்பு அண்டகம் எனப்படும்.
இரண்டாம்நிலை பால் பண்புகள்
இரண்டாம் நிலையில் இருபாலரின் உடலிலும் உடல் அமைப்பிலும் பல வேறுபாடுகள் நடக்கும்.
ஆண்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்
- ஆண்களின் குரல்வளை வளர்ச்சி அடையும்.
-
விந்தக வளர்ச்சி ஏற்படுவதால் டெஸ்ட்டோஸ்டீரான் அல்லது ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன்கள் சுரக்கும்.
- உடலில் தசை வளர்ச்சி ஏற்படும்.
- எலும்பின் அளவில் மாற்றங்கள் ஏற்பட துவங்கும்.
- உடலிலும் பிறப்புறுப்பிலும் உரோமத்தின் மாற்றங்கள் ஏற்படும்.
- வியர்வை சுரப்பிக்களின் தூண்டல் அதிகரிக்கும்.
பெண் ஏற்படும் மாற்றங்கள்
- அண்டகங்களில் ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் சுரக்கும்.
- மார்பகங்கள் வளர்ச்சி அடைய துவங்கும்.
- பிறப்புறுப்பின் வெளியே உரோம வளர்ச்சி அடைய துவங்கும்.
- அக்குள் பகுதியில் உரோம வளர்ச்சி அடைய துவங்கும்.
- உடலில் கொழுப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்.