PDF chapter test TRY NOW
ஆணோ பெண்ணோ, இருபாலரின் உடலிலும் பருவமடையும்போது நான்கு வகை முக்கிய மாற்றங்கள் ஏற்படும். அவை பின்வருமாறு,
- உடலின் அளவில் ஏற்படும் மாற்றங்கள்
- உடலின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- முதல்நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
- இரண்டாம் நிலை பால் பண்புகளின் வளர்ச்சி
உடலில் மாற்றங்கள்
பருவமடைதலில் ஏற்படும் முக்கிய முதல் நிலை மாற்றம் வளர்ச்சி ஆகும். இது, இருபாலரின் உடலிலும், உயரம் மற்றும் எடையில் தாக்கத்தை ஏற்படுத்தும். பருவமடைதல் காலம் என்பது பெண்களில் 10-12 வயதில் துவங்கி 17-19 வயதிலும், மேலும் ஆண்களில் 12-13 வயதில் துவங்கி 19-20 வயதில் முடிவு பெறும்.
இந்த குறிப்பிட்ட பருவத்தில் ஆண்களின் உயரத்தில் 23 செ.மீ வரை அதிகரிப்பார்கள். அதுவே பெண்களில் சராசரியாக 26 செ.மீ அதிகரிப்பு ஏற்படும். இருபாலரின் உடலிலும் உயரம் மட்டும் இன்றி உடல் எடையும் ஒரு குறிபிட்ட அளவு அதிகரிக்கும். உடல் எடையை பொறுத்த வரை தோராயமாக பெண்களுக்கு 17 கிலோவும், ஆண்களில் 19 கிலோவும் அதிகம் ஆகும்.
உடல் அமைப்பில் மாற்றங்கள்
குழந்தை பருவத்தில் இருபாலரின் உடலிலும் உடலை விட கால்களே அதிக வளர்ச்சி அடையும். இதனால், பருவமடைதல் காலத்தில் உடல் பகுதியும் வேகமாக வளர்ச்சி அடைய துவங்குகிறது.
முக்கியமாக, இடுப்பு, தோள்பட்டைப் பகுதி விரிவடைவதால், உடல் வயது வந்த தோற்றத்தை அளிக்கும்.
ஆண் மற்றும் பெண்ணின் வளர்ச்சியின் விகிதங்கள்