PDF chapter test TRY NOW
ஒரு கிரிக்கெட் மட்டையாளர் பந்தை எதிர் கொள்வதை உற்றுநோக்குங்கள். கிரிக்கெட் பந்தை அவர் எல்லைக்கோட்டிற்குச் செலுத்தவேண்டுமெனில் அவர் பந்தின் மீது அதிக விசையைச் செயல்படுத்த வேண்டும். எனவே, ஒரு பொருளின்மீது செலுத்தப்படும் விசையின் அளவைப் பொருத்து அதன் விளைவும் இருக்கும்.
விசையின் விளைவை முழுவதுமாக அறிந்து கொள்ள பின்வரும் செயல்பாடு பயன்படுகிறது
செயல்பாடு:
கூர்மையான ஊசிகளை ஒரு மரப்பலகையின் மீது குறுக்கும் நெடுக்குமாக வரிசையாக அடுக்கி வைக்கவும்.
ஒரு பலூனில் காற்றை நிரப்பவும்.
பலூனை ஊசிகளின் மேல் வைத்து மெதுவாக அதன்மீது ஒரு சிறிய புத்தகத்தை வைக்கவும்.
பலூன் வெடிக்குமா?
ஊசிகள் பலூனை வெடிக்கச் செய்யுமா?
பலூனின் மீது ஒரே ஒரு ஊசியைக் கொண்டு அழுத்தினாலே அது வெடித்துவிடும். ஆனால், இங்கு பல ஊசிகள் அழுத்தினாலும் அது வெடிக்கவில்லை.
காரணம்:
ஒரே ஒரு ஊசியானது சிறிய பரப்பின்மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பல ஊசிகள் சேர்ந்து குறைவான அழுத்தத்தை அதிக பரப்பில் ஏற்படுத்துகின்றன. இங்கு செயல்படுத்தப்படும் விசையானது அதிகமான புறப்பரப்பில் பகிர்ந்தளிக்கப்படுவதால் பலூன் வெடிப்பதில்லை.
விளைவு:
இதன் மூலம், விசையின் விளைவானது அதன் எண் மதிப்பையும், அது செயல்படும் பரப்பையும் சார்ந்தது என்பது தெளிவாகிறது.
எந்தவொரு பொருளின் புறப்பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை உந்து விசை எனப்படும்.
இது நியூட்டன் என்ற அலகினால் அளவிடப்படுகிறது.